புதுடெல்லி; கடந்த 2008ம் ஆண்டு முதல் 2011 வரையிலான காலகட்டத்தில்
ஜனாதிபதியாக இருந்த பிரதிபா பாட்டீல் 255 முறை விமான பயணம் செய்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் 108 முறை மட்டுமே பிரதமர் மன்மோகன்சிங் விமான பயணம்
செய்துள்ளார். பிரதிபா பாட்டீல் ஜனாதிபதியாக இருந்தபோது அடிக்கடி
குடும்பத்தாருடன் வெளிநாடு பயணம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அவர் மறுத்தார். அயல்நாடுகளுடனான உறவை பலப்படுத்த இந்த பயணங்கள் மிக
அவசியம் என ஜனாதிபதி அலுவலகம் தரப்பில் பதில் தரப்பட்டது. பச்சை பொய்யை ஒரு சாதாரண அரசியல்வாதி சொல்வதை புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் ஒரு ஜனாதிபதி என்பவர் இந்த அளவு தரம் தாழ்ந்து இருப்பதை என்ன சொல்வது ?
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் அதிக அளவில் பிரதிபா பாட்டீல் விமான பயணம் செய்திருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.
2008 முதல் 2011 வரை அவர் 255 முறை விமான பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக ரூ. 140 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தகாலகட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் 108 தடவை மட்டுமே விமான பயணம் செய்துள்ளார். துணை ஜனாதிபதி அன்சாரி 106 முறை விமானத்தில் பறந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக