வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

Ramdas:பள்ளி நிர்வாகிகளை(Mrs.YGP) கைது செய்ய வேண்டும்


சென்னை தனியார் பள்ளி மாணவன் சாவு: பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்< பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் படித்து வந்த  ரஞ்சன் என்ற நான்காம் வகுப்பு மாணவன் நீச்சல் பயிற்சியின் போது குளத்தில் மூழ்கி உயிரிழந்தான் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
லட்சம் லட்சமாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மாணவர்களின் பாதுகாப்பில் எந்த அக்கறையும் செலுத்துவதில்லை என்பதையே இது  போன்ற விபத்துகள் காட்டுகின்றன.
சென்னையில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் நீச்சல் பயிற்சி என்ற பெயரில் மாணவர்களிடமிருந்து பணம் பறிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. மாணவன்  ரஞ்சன் படித்த பள்ளியிலும் இதேநிலை தான். மாணவர்களின்  நீச்சல் பயிற்சிக்காக போதிய எண்ணிக்கையில்  உயிர்காப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. ரஞ்சன் குளத்தில் மூழ்கி வெகுநேரத்திற்கு பிறகே அவரை தேடும் பணிகள் தொடங்கியுள்ளன. சற்று முன்பாகவே தேடுதல் பணியை தொடங்கியிருந்தால்  ரஞ்சனை காப்பாற்றியிருக்க முடியும்.

ஆனால், பள்ளி நிர்வாகம் அலட்சியம் காட்டியதால் மாணவன் உயிரிழக்க நேரிட்டிருக்கிறது. எனவே, மாணவன் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து அதில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்டோரை சேர்க்கவேண்டும். சென்னை தாம்பரத்தில் மாணவி ஸ்ருதி பேருந்திலிருந்து உயிரிழந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைப் போல இந்த வழக்கிலும் பள்ளிநிர்வாகிகள் கைது செய்யப்படவேண்டும். தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அனுமதியின்றி நடத்தப்படும் நீச்சல்குளங்கள் அனைத்தையும் மூட வேண்டும்.

கருத்துகள் இல்லை: