தமிழ்
சினிமாவின் இன்றைய டாப் நடிகைகள் பலரும் தெலுங்கு திரையுலகிலிருந்து இங்கு
வந்தவர்கள் தான். தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் போது யாரும் இங்கு
வருவதில்லை.

மாற்றான், துப்பாக்கி என இரண்டு பெரிய படங்களில் காஜல் ஒப்பந்தமானதன் பின்னணி வேறெதுவுமில்லை, பொதுவாகவே சூர்யாவின் படங்களில் நடித்த ஹீரோயின்களை விஜய்யின் அடுத்த படங்களில் பார்க்கலாம்.தெலுங்கில் காஜல் கையில் படம் இல்லாத நேரமாக பார்த்து கே.வி.ஆனந்த் கல்ஷீட் வாங்கிவிட, காஜலும் விஜய்யின் அடுத்தபடமான துப்பாக்கியில் தானாக சேர்க்கப்பட்டார் என்கிறது கோடம்பாக்கம். துப்பாக்கி படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்ட காஜல் “ விஜய் போன்ற ஜனரஞ்சக மாஸ் ஹீரோவுடன் தமிழ்ப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. விஜய் ஒரு நல்ல நடிகர். காதல், நடனம்,நகைச்சுவை போன்ற காட்சிகளில் சிறப்பாக நடிக்கிறார்” என்று கூறியுள்ளார்.மாற்றான், துப்பாக்கி முடிந்ததும் காஜல் 4 ட்தெலுங்கு படங்களில் நடிக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக