காஜல் அகர்வால், சமந்தா, ஹன்சிகா மோத்வானி என இளம் நடிகைகள் தற்போது முன்னணி இடத்தை கைப்பற்றி கோலிவுட், டோலிவுட்டில் கலக்குகின்றனர். இதனால் சீனியர் நடிகைகள் த்ரிஷா, நயன்தாரா, தமன்னா, ஸ்ரேயா உள்ளிட்டோர் கலக்கத்தில் உள்ளனர். இளம் நடிகர்கள், புதுமுகங்கள் ஜோடி சேர்க்க வேண்டுமென்றால் வளரும் நடிகைகளையே இயக்குனர்கள் விரும்புகிறார்கள்.
இந்த போட்டியை சமாளிப்பது எப்படி என்று சீனியர் நடிகைகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தால் மட்டுமே பீல்டில் நீடிக்க முடியும் என்பதை த்ரிஷா, நயன்தாரா, தமன்னா புரிந்துகொண்டுள்ளனர்.
ச¤ல நாட்களுக்கு முன் பார்ட்டி ஒன்றில் சந்தித்த இவர்கள், இது பற்றி தீவிரமாக பேசினார்களாம். சினிமாவில் தூது விட்டு சான்ஸ் பிடிப்பது சகஜமாகிவிட்டது. இதற்கு இந்த சீனியர் நடிகைகளும் விதிவிலக்கல்ல என்கிறது சின¤மா வட்டாரம். அதனால்தான் நயன்தாரா, ஆர்யா ஜோடியாகவும் ஜெயம் ரவி, ஜீவா, விஷால் ஜோடியாக த்ரிஷாவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐதரா பாத்தில் நேற்று முன்தினம் விழா நடந்தது. இதில் த்ரிஷா, நயன்தாரா, தமன்னா மூவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து கலந்துகொண்டனர்.
அப்போது ஒருவரையொருவர் கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவுக்கு பல நடிகைகள் வந்திருந்தாலும் இந்த மூவர் கூட்டணி மட்டும் தனியாக தெரிந்தது. மூன்று பேரும் ஜோடியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். சில மாதங்களுக்கு முன்வரை ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க கூட விரும்பாதவர்கள். இப்போது எப்படி இப்படி என பார்வையாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர். பிறகு ஒரே காரில் ஏறி இரவு விருந்து சாப்பிட சென்றனர் இந்த புது தோழிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக