இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் சிகரெட் பிடிக்கிறார்கள்.
நாள் ஒன்றுக்கு ஆண்கள் 6 சிகரெட் பிடி்ததால் பெண்கள் 7 சிகரெட்
பிடிக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இது குறித்து மருத்துவ பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தி வருமாறு, இந்தியாவில் 21 சதவீத ஆண்களும், 3 சதவீத பெண்களும் தினமும் புகை பிடிக்கின்றனர். 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 47.9 சதவீதம் பேர் அதாவது ஆண்களில் கிட்டத்தட்ட பாதி பேர் புகையிலை உட்கொள்கின்றனர். சுமார் 206 மில்லியன் இந்தியர்கள் புகையிலை மெல்லும், மூக்குப் பொடி போடும் பழக்கம் உள்ளவர்கள். இதில் 32.9 சதவீதம் பேர் ஆண்கள். புகையிலை பயன்படுத்தும் 5 பெண்களில் ஒருவர் புகையிலை மெல்லும், மூக்குப் பொடி போடும் பழக்கமுள்ளவர். அதுவே 10ல் ஒருவர் தான் புகை பிடிக்கின்றனர்.
சராசரி இந்திய பெண் 17.5 வயதில் புகை பிடிக்க ஆரம்பிக்கிறார். அதுவே ஆண்கள் 18.8 வயதில் புகை பிடிக்கும் பழக்கத்தை துவங்குகின்றனர்.
புகை பிடிக்கும் பழக்கமுள்ள சராசரி இந்தியர் நாள் ஒன்றுக்கு 2 சிகரெட் பிடிக்கிறார். 16.1 சதவீத ஆண்கள் பீடி பிடிக்கின்றனர். புகையிலை பயன்பாட்டில் சீனா முதலிடத்திலும்(300.8 மில்லியன்), இந்தியா இரண்டாவது இடத்திலும்(274.9 மில்லியன்) உள்ளன.
இந்தியாவில் 205.9 மில்லியன் பேர் புகையிலை மற்றும் மூக்குப் பொடி பயன்படுத்துகிறார்கள். 20 சதவீதத்திற்கும் குறைவான பெரியவர்களே புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுள்ளனர். இந்தியா தவிர சீனா, எகிப்து, வங்கதேசம் மற்றும் ரஷ்யாவிலும் குறைவான பேரே புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுள்ளனர்.
ஆனால் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில் மற்றும் உருகுவேயில் 35 சதவீதம் பேர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டாக்டர் கே. ஸ்ரீநாத் ரெட்டி கூறுகையில், புகையிலை பயன்படுத்தும் பழக்கம் ஆண்களிடையே குறைந்தும்(51 சதவீதத்தில் இருந்து 48 சதவீதம்), பெண்களிடையே அதிகரித்தும்(10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம்) உள்ளது. இதனால் புகையிலை கம்பெனிகள் பெண்களை குறி வைத்தே செயல்படுகின்றன என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக