டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொண்ட பல முக்கிய
முடிவுகளுக்கு கர்த்தாவாக இருந்தவர் என்று குடியரசுத் தலைவர் பிரணாப்
முகர்ஜி பற்றி அவரது இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கடந்த இரண்டு அரசுகளில் தகவல் அறியும் உரிமை சட்டம், வேலைவாய்ப்பு உறுதி சட்டம், உணவு பாதுகாப்பு மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற பல முக்கிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இத்திட்டங்கள் 95-க்கும் மேற்பட்ட அமைச்சரவைக் குழுக்களுக்கு தலைவராக இருந்ததன் மூலம் பிரணாப் முகர்ஜி நிறைவேற்றினார் என்று அவரது இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கிராமாங்கிகள், எக்ஸிம் வங்கி மற்றும் நபார்டு வங்கிகள் அமைக்கப்பட்டதற்கும் பிரணாப் முகர்ஜி உறுதுணையாக இருந்தார் என்று புகழாரம் சூட்டப்பட்டிருக்கிறது.
இதேபோல் யூ டியூப்பில் பிரணாப் முகர்ஜியின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை வெளியிடவும் ஃபேஸ்புக்கில் அவர் தொடர்ந்து இயங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக