புதன், 15 ஆகஸ்ட், 2012

நீதிபதிகளில் Few ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள்.மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள மாநில சட்டசபை ஆண்டுவிழாவையொட்டி, சட்டசபையில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பேசுபவர்கள் பட்டியலில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பெயர் இல்லாத போதிலும், அவர் சபாநாயகரிடம் அனுமதி பெற்று பேசினார். அப்போது, நீதித்துறையை சரமாரியாக விமர்சித்தார்.மம்தா பானர்ஜி பேசியதாவது:நீதிபதிகளில் ஒரு பிரிவினர் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு, சாதகமான தீர்ப்பு அளிக்கிறார்கள். அதாவது, தீர்ப்பு, விலைக்கு வாங்கப்படுகிறது. இதை சொல்ல எனக்கு வருத்தமாக இருக்கிறது. இதற்காக என் மீது அவதூறு வழக்கு தொடரப்படலாம். நான் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படலாம். ஆனால், இதை இங்கேயோ அல்லது வேறு எங்கேயோ நான் சொல்லியே ஆக வேண்டும்.

அதுபோல், இதுவரை எத்தனையோ விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றினால் என்ன பலன்? விசாரணை கமிஷன்களுக்காக எவ்வளவோ பணம் செலவிடப்படுகிறது. ஆனால், அவர்கள் உயர் அதிகாரிகளை அழைத்து பேசுவதைத் தவிர வேறு எதுவும் செய்வது இல்லை.தலைமைச் செயலாளர், போலீஸ் கமிஷனர், டி.ஜி.பி. போன்ற உயர் அதிகாரிகளை அழைத்து, 12 மணி நேரம் உட்காரவைக்கிறார்கள். ஒரு தவறுக்கு அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மட்டுமே பொறுப்பு ஏற்க செய்வது ஏன்? எல்லோருமே பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

கருத்துகள் இல்லை: