வியாழன், 16 ஆகஸ்ட், 2012

PRP யின் 15 பஸ்கள் பறிமுதல்..கிரானைட் முறைகேடு

 பி.ஆர்.பி நிறுனத்திற்கு சொந்தமான 15 பஸ்களை போலீசார் பறிமுதல் கிரானைட் முறைகேடு செய்த உரிமையாளர்களின் வீடுகளில் நடந்த சோதனையை தொடர்ந்து அவர்களின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் துவக்கியுள்ளனர். 
மதுரை மாவட்டத்ல் உள்ள கிரானைட் குவாரிகளில் ரூ.16 ஆயிரம் கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது குறித்து 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 15 நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரானைட் அதிபர்கள், பங்குதாரர்கள் வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட 22 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு ஈடுபட்டுள்ளது. சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கான பத்திரங்கள், பட்டாக்கள் இருந்தன.



கிரானைட் கற்களை இருக்கும் பகுதிகளில் இருந்த நிலங்கள் அனைத்தும் ஏக்கர் கணக்கில் போட்டி, போட்டு வாங்கி குவிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

மேலும் கிரானைட் குவாரிகளில் கிடைத்த வருமானத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ததும் தெரிந்தது. அப்படி எந்தெந்த துறைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை கண்ட றிந்து அந்த நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் பணியை போலீசார் துவக்கியுள்ளனர். கிரானைட் நிறுவன முறைகேடு தொடர்பான வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி யுள்ளனர். இதனால் அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் முடக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் நிலம், வாகனங்கள் உள்ளிட்ட இதர சொத்துக்களையும் பறிமுதல் செய்யவும், முடக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, எஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக பிஆர்பி நிறுவன பஸ்களை பறிமுதல் செய்யும் பணி இன்று காலை துவங்கியது. மதுரையை சுற்றிலும் பல்வேறு ஊர்களுக்கு 15க்கும் மேற்பட்ட பஸ்களை பிஆர்பி நிறுவனம் இயக்கி வருகிறது.

மேலும் தொழிற்சாலைகளுக்காக 30க்கும் மேற்பட்ட பஸ்களையும் இயக்கி வருகிறது. இன்று காலை 6.15 மணிக்கு பொன்னமராவதியிலிருந்து மதுரை வந்த பஸ்சை மேலூர் பஸ்நிலையத்தில் போலீசார் மறித்து நிறுத்தி பறிமுதல் செய்தனர்.


மேலூர் ஸ்டேஷனுக்கு பயணிகளுடன் கொண்டு பஸ் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பயணி களுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது. காலை 9.50 மணிக்கு பிஆர்பி நிறுவனத்தின் ஸ்பேர் பஸ்சை மேலூர் பஸ்நிலையம் அருகே போலீசார் மறித்து பறிமுதல் செய்து மேலூர் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அப்பகுதி வழியாக சென்ற பிஆர்பி பஸ்களை போலீசார் தொடர்ந்து பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை: