Viru News கைது கோரிக்கையை எழவிடாமல் தடுக்க மேட்டுக்குடி மேலிடம் முயற்சி
சென்னை
கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியின் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன்
பலியான சம்பவம், இன்றே கோர்ட்டுக்கு செல்கிறது. இந்த விவகாரத்தை அவசர
வழக்காக விசாரிக்கக் கோரி கார்த்திக் ராஜா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக இன்று மதியம் 12 மணிக்கு சிறப்பு விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி இக்பால் அறிவித்திருந்தார். ஆனால் வழக்கு ஆவணங்கள் உரிய நேரத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, விசாரணையை வரும் செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி இக்பால் கூறியிருந்தார்.
இருப்பினும், வழக்கின் அவசரம் குறித்து வலியுறுத்தப்பட்ட பின், வழக்கு பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை முடியாத நிலையில், வழக்கு கோர்ட்டுக்கு போயிருப்பதில் ஒரு விஷயமான பின்னணி உள்ளது.
வழமையான நடைமுறையில் போலீஸ் விசாரணையை நடக்க விட்டிருந்தால், இதில் சில ‘பெரிய இடத்து’ தலையீடுகள் வர சான்ஸ் இருந்தது. சாட்சிகள்கூட, ஓரளவுக்கு தயங்கியிருக்க சந்தர்ப்பம் இருந்தது. குறிப்பிட்ட தனியார் பள்ளியின் பெரிய இடத்து தொடர்புகள் அனைவருக்கும் தெரிந்ததே.
இப்போது, வழக்கு விசாரணைக்கு முன்பே கோர்ட்டுக்கு சென்றிருப்பதால், கோர்ட் மேற்பார்வையில் விசாரணை நடைபெற ஒரு சான்ஸ் உள்ளது. அல்லது, வழக்கு விசாரணைக்காக நீதிபதி ஒரு கால அவகாசம் கொடுத்து, அதற்கு முன்பே விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி போலஷூக்கு உத்தரவிட முடியும்.
நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லப் போகிறது பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக