ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் சினிமா விழா - கோடம்பாக்கம் திரள்கிறது!
ஜெயா டிவி
ஆரம்பிக்கப்பட்டு 14 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வரையில் நினைத்தாலே
இனிக்கும் என்ற நிகழ்ச்சிக்கு அந்த நிர்வாகம் சார்பில் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இதில் பழம்பெரும் இசையமைப்பாளர்கள் எம்எஸ் விஸ்வநாதன் - டி கே ராமமூர்த்திக்கு மரியாதை செய்யப்படுகிறது. மேலும் அவர்களின் இசைக் கச்சேரியும் நடக்கிறது.
இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்று விஸ்வநாதன் - ராமமூர்த்தியை கவுரவிக்கிறார்.
சினிமா சம்பந்தப்பட்ட விழாவில் ஜெயலலிதா கடைசியாகக் கலந்து கொண்டது 2005-ம் ஆண்டுதான். அதன் பிறகு அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இப்போது புதிதாக பதவி ஏற்ற பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி இது. வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி மாலை நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கிறது.
இதற்காகவே காத்திருந்த தமிழ் சினிமாக்காரர்கள் மொத்தப் பேரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு மேடையில் பேச வாய்ப்புக் கிடைக்குமா என்று தெரியவில்லை! எப்படி எப்படியெல்லாம் முதல்வரை புகழ்ந்து காவடி எடுக்கலாம் என்று சகல சினிமாக்காரர்களும் வசனகர்த்தாக்களை தேடி ஓட்டம். இப்படிப்பட்ட சான்ஸ் கிடைப்பது அரிது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக