பெரியார் திராவிடர் கழகம் உடைந்தது! கொளத்தூர் மணியின் புதிய இயக்கம்!!
Viru News
பெரியார்
திராவிடர் கழகத்தில் இருந்த தோழர்கள் சிலர், கருத்து வேறுபாட்டின் காரணமாக
தனியே பிரிந்து கொளத்தூர் மணி தலைமையில் புதிய இயக்கம் ஒன்றை
ஆரம்பித்துள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகம் என்ற புதிய அமைப்பு இவர்களால்
உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழின உணர்வாளர் என பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கொளத்தூர் தா.செ. மணி இந்த புதிய இயக்கம் தொடர்பான அறிவிப்பை ஈரோட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“திராவிடர் விடுதலைக் கழகம் என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்துக்க் நான் தலைவராக செயல்படுவேன். விடுதலை க. இராசேந்திரன் பொதுச் செயலாளராக செயல்படுவார். பெரியார் திராவிடர் கழகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்களாக இருந்தவர்களின் பெரும்பான்மையினர் எமது இயக்கத்தில் இணைந்துள்ளனர். வரும் டிசம்பர் 24, 25-ம் தேதிகளில் ஈரோட்டில் இரண்டு நாள் மாநில மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பெரியார் திராவிடர் கழகத்தில் இருந்து இது தொடர்பான அறிவித்தல் ஏதும் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக