நிருபர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதா தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவித்ததாக கூறி என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது கட்சி அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் போல் எதிர்க்கட்சியினரும் நடந்து கொள்ள வேண்டும் என்று கருதுகிறார் போலும்.
என் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாய்தா வாங்காமல் சட்டப்படி சந்திப்பேன்.
மேலும் எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன்.
1991ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது 180 அவதூறு வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீது போட்டார். அந்த வழக்குகளை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பின் அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.
சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பை, மாசு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் வாழத் தகுதியற்ற நகரம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டுள்ளார். காலராவுக்கு 29 பேர் இறந்ததாக தெரிவித்த அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கு சுமார் 50 பேர் பலியாகி உள்ளார்கள். அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கருணாநிதி முதல்வக இருந்தபோது ஜெயலலிதா பல குற்றச்சாட்டுகளை கூறினார். ஆனால். அதற்காக கருணாநிதி அவதூறு வழக்கு தொடரவில்லை.
குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கை தொடர்ந்து அடுத்த மாதம் 1ம் தேதி முதல் குட்காவுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இதை தமிழ்நாட்டில் கொண்டு வரவேண்டும் என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக