சென்னை: போட்டியைச் சமாளிக்கவும், தொடர்ந்து
சினிமாவில் நிலைக்கவுமே அரை நிர்வாண போஸ் கொடுக்க வேண்டி வந்தது, என்று
நடிகை ஸ்ரேயா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
மேக்சிம் இதழுக்காக
நடிகை ஸ்ரேயா இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கவர்ச்சியாக போஸ்
கொடுத்திருந்தார். மேலாடை இல்லாமல் படுக்கையில் படுத்தபடி இருக்கும் இந்த
புகைப்படங்கள் இந்தி, தமிழ், தெலுங்கு படவுலகில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.கவர்ச்சியாக போஸ் கொடுத்தது மட்டுமின்றி தனது சினிமா வாழ்க்கையில் இதுதான் சிறந்த போட்டோ ஷூட் என்றும் ஸ்ரேயா
கூறியிருந்தார்.ஸ்ரேயா">ஸ்ரேயாவிடம், 'திடீரென இப்படி மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுக்கக் காரணம் என்ன' என்று கேட்டபோது, "வேறு வழியில்லை... இன்றைக்கு சினிமாவில் உள்ள போட்டியை எதிர்கொள்ள, தொடர்ந்து சினிமாவில் நீடிக்க வேண்டுமானால் இந்த அளவுக்கு இறங்கித்தான் ஆகவேண்டும். தவறில்லை. எனக்குள்ளே இருக்கும் `கிளாமர்' என்ன என்பதை காட்டவே இப்படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தேன்.
அந்த பத்திரிகைக்கு போஸ் கொடுப்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல. இது இரண்டாவது முறை. முதல் முறை புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த பின்னர் எனக்கு எத்தனையோ படவாய்ப்புகள் வந்தன. பாலிவுட்டில் கூட பல வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.
இந்த இரண்டாவது புகைப்பட ஷூட் எனக்கு மேலும் புதிய படவாய்ப்புகளை கொடுக்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.
நடிகையாக நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. எனக்கு 30 வயதாகிறது. ஆனால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. ஹாலிவுட்டில் ஹீரோயின்கள் சினிமாவிற்கு வருவதே 30 வயதில்தான். தற்போது பாலிவுட்டிலும் 30 வயதை தாண்டிய ஹீரோயின்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களைவிட நான் சிறியவள் தான். எனவே இன்னும் பல ஆண்டுகள் நடிப்பேன்,'' என்றார்<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக