செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 போலீஸ் உள்பட 3 பேர் பலி

டெக்சாஸ்: அமெரிக்காவில் பல்‌கலை. வாளகத்தில் மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரு அதிகாரிகள் உள்பட மூன்று பேர் பலியாயினர். துப்பாக்கிச்சூடு நடத்தியவனும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரி்க்காவில் பரவி வரும் துப்பாக்கி கலாச்சாரம் அந்நாட்டு மக்களை அலற வைத்து வருகிறது.
அமெரி்க்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் இருந்து 90 கி.மீ. தொலைவில் ஏ அன்ட் எம். என்ற பல்கலை.க்கழம் உள்ளது. இப்பல்கலை. வளாகத்தில் நன்பகல் 12 மணியளவில் கால்பந்து மைதானத்திற்குள் புகுந்த மர்ம மனிதன் திடீரென கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். அப்போது பல்கலை.யில் இருந்த உயர் போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கிச்சூட்டில் பலியாயினர்.

உடன் சுதாரித்துக்கொண்ட சக அதிகாரிகள் பதில் தாக்குதல் நடத்தியதில் துப்பாக்கிச்சூடு நடத்தியவன் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. இந்த சம்பவம் பல்க‌‌லை.யில் பரபரப்பினை ஏற்படுத்தியது. அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.முன்னதாக மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட போது அவனை போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி முனையில் பிடித்து கைது செய்ததாக தகவல்கள் வெளியாயின. பின்னர் அவன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டானா? அல்லது தனக்குதானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டானா? என்பது குறித்த தகவல் தெரியவி‌ல்‌லை.
இது குறித்து டெக்சாஸ் கல்லூரி நிலையத்தின் பிரையான் நகர போலீஸ் செய்தி தொடர்பாளர் ஜான்அக்னிவ் கூறுகையில், இந்த துப்பாக்கிச்சூட்டில் இரு போலீஸ் அதிகாரிகள் பலியாயினர். ஒரு பெண் போலீ்ஸ் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றார்.
பல்கலை.வளாகத்தில்துப்பாக்கிச்சூடு நடத்தியது இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. துப்பாக்கியால் சுட்டவன் மாணவனாக இருக்க வாய்ப்பில்லை. என்றாலும் அவன் தனக்குதானே சுட்டுக்கொண்டான் என ஸ்காட் மெக்குலம் என்ற உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


அமெரிக்காவில் தொடர்ச்சியாக துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் கொலராடோவில் தியேட்டர் ஒன்றில் புகுந்த ‌ஜேம்ஸ் ஹோல்ம்ஸ் என்ற 24 வயது இளைஞன் கண்மூடித்தனமாக சுட்டதில் 12 பேர் பலியாயினர். இந்த சம்பவம் நடந்து இரு வாரங்களில் , கடந்த 5-ம் தேதியன்று விஸ்கோன்சிங் மாகாணத்தில் உள்ள சீக்கிய கோயிலில் புகுந்த மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாயினர். நேற்று டெக்சாஸ் மாகாணத்தில் பல்கலை. வளாகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. தொடரச்சியாக நடந்த துப்பாக்கிசூட்டினால் அமெரிக்கர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: