திருவண்ணாமலை
நகரில் முதல் கட்டமாக முக்கிய சாலைகளில் ஆக்ரமிப்பு பகுதிகள்
இடிக்கப்பட்டு கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. மத்தலாங்குளத்தெரு,
அண்ணாசாலை பகுதிகளில் அந்த பணி நடந்தது.தற்போது
சன்னதி தெருவில் ஆக்ரமிப்புகள் இடிக்கப்பட்டு வருகின்ற இந்த தெருவில் தான்
நகராட்சி அலுவலகம் உட்பட பல முக்கிய கட்டிடங்கள் உள்ளன.
குடியிருப்புகளும், பல கடைகளும் உள்ளன. இந்த சாலையில் அரசு கட்டிடங்கள்
தவிர மற்றவையெல்லாம் 10 அடி சாலை பகுதியை ஆக்ரமித்தே கட்டப்பட்டுள்ளன.இதனை
இடித்த அதிகாரிகள் ஒரு வீட்டின் அருகே வந்தபோது அந்த வீட்டின் ஆக்ரமிப்பு
பகுதியை மட்டும் இடிக்காமல் விட்டுவிட்டனர். நீண்ட யோசனைக்கு பின் ஒரே ஒரு
படிக்கட்டை மட்டும் இடித்துள்ளனர்.
அதேபோல் அதன் அருகேயுள்ள கரூர் வைஸ்யா பேங்கின் ஏ.டி.எம் அறை முழுவதும் ஆக்ரமிப்பு பகுதி அதனையும் இடிக்கவில்லை. ஆனால் அதன் அருகே இந்த வீடுகள், கடைகள் 10 அடிக்கு மேல் ஆக்ரமிப்பு என இடித்தனர். ஆனால் குறிப்பிட்ட அந்த வீட்டை மட்டும் இடிக்கவில்லை யாருடைய வீடு என விசாரித்தபோது, அது தற்போதைய திருவண்ணாமலை தொகுதி அதிமுக செயலாளர், முன்னால் நகரமன்ற தலைவர் வீடு என்கின்றனர். தற்போதும் அந்த வீட்டில் தான் அவர் குடியிருந்து வருகிறார். அதனால் தான் இடிக்கவில்லை என்றனர் சில அலுவலர்கள். >பொதுமக்களின் வீடுகள் வியாபார நிறுவனங்களை ஆக்ரமிப்பு என இடித்த அலுவலர்கள் அதிமுக பிரமுகர் வீட்டின் ஆக்ரமிப்பு பகுதிகளை மட்டும் இடிக்கவில்லை. ஆளும்கட்சி என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் ஆக்ரமிப்பு செய்து கட்டிக்கொள்ளலாமா என பொதுமக்கள் கேட்டு வருகின்றனர். நகரில் இப்படி ஆளும்கட்சிக்கு வேண்டப்பட்ட பல கடைகள், வீடுகள் இடிக்கப்படாமல் உள்ளன. <அதிகாரிகளோ நாங்கள் நேர்மையாக செயல்படுகிறோம் என ஏமாற்றி வருகின்றனர். உயர் அதிகாரிகள் கண்டுக்கொள்வார்களா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக