Viru News
விமானப்
பணிப்பெண் கீத்திகா சர்மா தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள்
அமைச்சர், இன்று (சனிக்கிழமை) அதிகாலை டில்லி போலீஸில் சரணடைந்தார்.
சரணடைந்த உடனே, இவரை கைது செய்தது போலீஸ்.
23 வயதான் விமானப்
பணிப்பெண் கீத்திகா தற்கொலை செய்துகொண்டபோது, எழுதி வைத்த துண்டுச் சீட்டு
ஒன்றில், “எனது தற்கொலைக்கு காரணம், கோபால் காண்டா” என்று
எழுதப்பட்டிருந்தது. (விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) அதையடுத்து, காண்டாவை போலீஸ் தேடத் துவங்கியது.கோபால் காண்டா பணபலம், மற்றும் அரசியல் பலம் கொண்டவர். பல ஹோட்டல்கள், மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர். கீத்திகா தற்கொலை செய்தபோது, ஹரியானாவில் அமைச்சராக இருந்தார். விவகாரம் பெரிதாகவே, அமைச்சு பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவானார். http://namathu.blogspot.com/2012/08/air-hostess-ex.html
10 நாட்களாக தலைமறைவாக இருந்த காண்டாவை போலீஸால் நெருங்க முடியவில்லை.
இன்று அதிகாலை 3 மணிக்கு டில்லி அசோக் விஹார் போலீஸ் நிலையத்துக்கு சென்ற காண்டா, தாம் சரணடைவதாக கூறினார். அவரை வலை வீசித் தேடிக்கொண்டு இருப்பதாக சொல்லிவந்த போலீஸ், உடனே அவரை கைது செய்துள்ளது. “இன்று காலை 10 மணிக்கு டில்லி ரோஹினி கோர்ட்டுக்கு அவரை அழைத்து ஆஜர் செய்வோம்” என்று அசோக் விஹார் போலீஸ் நிலையத்தில் கூறுகிறார்கள்.
காண்டாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் மனு ஒன்றை போலீஸ் ரோஹினி கோர்ட்டில் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஒன்று அல்லது, இரண்டு நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைக்கலாம்.
எப்படியோ, இன்று காலை 10 மணிக்கு ரோஹினி கோர்ட் வளாகத்தில் ஏகப்பட்ட மீடியா கேமராக்களை பார்க்கலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக