-மெரினாவில் மூழ்கி ஒரே மாதத்தில்
10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மெரினா கடற்கரைக்கு தினமும்
ஏராளமானோர் வருகின்றனர். இங்கு குளிப்பவர்கள் பலர் அலையில் சிக்கி
பலியாகின்றனர்.
இதை தடுக்க அபாய பகுதியாக இருப்பதால் இங்கு குளிக்க தடை
விதிக்கப்படுகிறது என்று காவல்துறையினர் மெரினாவில் போர்டு எழுதி
வைத்துள்ளனர்.
அதையும் மீறி குளிப்பவர்களை
காவல்துறையினர் கட்டுப்படுத்துகின்றனர். வார விடுமுறை மற்றும் பண்டிகை
காலங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மெரினாவில் குவிகின்றனர்.
இவர்களைக் கட்டுப்படுத்தும் அளவிற்கு
காவல் துறையினர் இருப்பது இல்லை. கடலில் குளிப்பவர்களை அப்புறப்படுத்த பீச்
பக்கி என்ற வாகனத்தை சென்னை காவல்துறை ஆணையராக இருந்த ராஜேந்திரன்
அறிமுகம் செய்தார். ஆனால், அது தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை.
மெரினாவில் கடந்த ஒரு மாதத்தில் 10-க்கும் மேற்பட்டோர் மூழ்கி பலியாகி
உள்ளனர். அதில், 3 பேரின் சடலம் இன்னும் கரை ஒதுங்கவே இல்லை.
இதுகுறித்து உயர் காவல்துறை அதிகாரி
ஒருவர் கூறுகையில், மெரினா கடற்கரையில் குடிபோதையில் வருபவர்கள் கடலில்
குளிக்கின்றனர். இவர்கள்தான் பெரும்பாலும் அலையில் சிக்கி பலியாகின்றனர்.
கடலுக்குள் நீரோட்டம் இருப்பதால் மூழ்குபவர்களின் உடல்கள் ஆஸ்திரேலியா
உள்ளிட்ட நாடுகளுக்கு நீரோட்டத்தோடு சென்று விடுகின்றன. இதனாலேயே
மெரினாவில் பெரும்பாலான உடல்கள் கரை ஒதுங்குவது இல்லை என்று காவல்துறை
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக