சமூக – அரசியல் செயற்பாட்டாளர் சந்திரமோகன் எழுதிய பணம்,பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்!
ஆதாரங்களுடன் எழுதிய பதிவுக்கு பியூஸ் மானுஷ் தன்னுடைய முகநூலில் பதிலளித்திருக்கிறார். அதில், சந்திரமோகன் வைத்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (மா.லெ) கட்சியைச் சேர்ந்த தோழர் சந்திரமோகன் என்னைப் பற்றி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் இது.. என்னைப் பற்றிய தகவல்களை எப்படி காவல்துறை அறிந்துகொள்கிறது என யோசித்திருக்கிறேன்…
தோழர் உங்களுடைய சிரிக்கும் முகத்தைத் தாங்கி இணையத்தில் வந்த என்னைப் பற்றிய கட்டுரை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. கட்டுரையின் தொடக்கத்திலேயே எனக்கும் அவருக்கும் எவ்வித முன்விரோதமும் இல்லை என தோழர் தெரிவிக்கிறார்.
சரியாகச் சொன்னீர்கள் தோழர் சந்திரமோகன், நான் உங்களை என் வாழ்நாளில் சந்தித்ததில்லை எனும்போது உங்களுக்கு எதிராக நான் என்ற கேள்வி எங்கிருந்து வருகிறது.
ஆனால் தோழர் என்னை இத்தனை காலமும் பின் தொடர்ந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
ஆமாம்…ஏரிகளைப் புனரமைக்கவும், நீர் சேகரிப்புக்கும், மண் வள மேம்பாட்டுக்கும், காடுகளை உருவாக்கவும் எனக்கு நிதி தேவை.
மூக்கனேரியை மட்டும் நாங்கள் புனரமைக்கவில்லை. அம்மாபேட்டை ஏரி, இஸ்மாயில் கான் ஏரி, குண்டக்கல் ஏரி, அரிசிபாளையம் தெப்பக்குளம், சமீபத்திய பள்ளப்பட்டி தெப்பக்குளம் ஆகியவையும் அடங்கும். எங்கெல்லாம் நீர் நிலைகள் அழகாக இருக்கிறதோ அங்கெல்லாம் நிலத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. எண்ணற்ற மக்கள் அதற்காக எனக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள். அதுபோல என்னுடைய திட்டங்களுக்கு அவர்கள் உதவினால் மகிழ்வேன்.” என்று தெரிவித்திருக்கும் அவர்,
வேதாந்தா- மால்கோ திட்டத்தை நீதிமன்றம் சென்று தான் நிறுத்தியதாகவும் அதுபோலா ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்துக்கு எதிராகவும் தான் போராடியதாகவும் பட்டியலிட்டுள்ளார்.
மூங்கில் குறித்தான கேள்விகளுக்கு மூங்கிலை சந்தையிலும் கருங்காலி அருகே உள்ள காடுகளிலிருந்து 20 டன் காய்ந்த மூங்கிலை ஒதுக்கீடு மூலம் பெற்றதாக குறிப்பிடுகிறார். காய்ந்த மூங்கிலை அறுவடை செய்ய, பணம் கொடுத்திருக்கிறோம் என்றும் அவர் தெரிவிக்கிறார். மூங்கிலை வளர்ப்பதன் மூலம் கூடுதல் ஆதாயம் பெறுவதில் பலர் ஏன் விரோதம் பாராட்டுகிறார் என கேள்வி எழுப்புகிறார் பியூஸ் மனுஷ்.

மூங்கில் பொருட்கள் தயாரிக்கும் கூடத்துக்கு மின்சாரம் திருடப்படுவதாக
சொல்லப்பட்ட குற்றச்சாட்டையும் மறுத்துள்ள அவர், மூங்கில் பொருட்கள்
பெரும்பாலும் கையாள் செய்யப்படுவை என்றும் குறைந்த அளவே மின்சாரம்
தேவைப்படும் என்றும் தெரிவிக்கிறார்.
கூட்டுப்பண்ணை குறித்து விளக்கமாக இணைய விவாதங்களில் தெரிந்துகொள்ள முடியாது என்னும் மானுஷ், வார இறுதி நாட்களில் நேரில் வந்து பார்க்குபடி அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த வனத்துக்காக வாங்கப்பட்ட நன்கொடை விவரங்களையும் அங்கே காணலாம் என்கிறார். பிணையில் வெளியே இருப்பதால் ஒரு நாளைக்கு இரண்டு முறை கையெழுத்திட வேண்டியிருப்பதாகவும் சொல்கிறார் பியூஸ் மானுஷ். /thetimestamil.com

1 கருத்து:
ஊரை ஏமாற்றுபவர்களையே தாங்கி பிடித்து பழகிய ஊடகமும் மக்களும்
ஒரு உன்னத சமூக செயல்பாட்டாளரை கண்டு பெருமை கொள்ள தங்கள் மனதை தயார் செய்து கொள்ளவில்லை போலும்
எல்லாம் விதி
கருத்துரையிடுக