தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாகவும், சசிகலா
புஷ்பா தாக்கப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களின்
கேள்விகளுக்கு மூத்த அமைச்சர்களாவது விளக்கம் அளித்திருக்க வேண்டும் எனவும்
மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக, தேமுதிக,
தமாகா, பாஜக உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் சட்டப்பேரவை
எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
விவசாயக் கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி அளித்த அதிமுக அரசு அதனை
முழுமையாக செயல்படுத்தவில்லை. கல்விக் கடன் சுமை காரணமாக மதுரையில் லெனின்
என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டார். இதுதான் அதிமுக அரசின் சாதனை. அதான் சபாநாயகர் தனபால் தெளிவா சொல்லிட்டார்ல ? பெண் என்று பார்க்கமாட்டோம்ல!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு
இல்லை. அதிமுக பெண் எம்பி சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் கூறியது தொடர்பாக,
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய திமுக உறுப்பினர்களுக்கு பேரவைத்
தலைவர் அனுமதி மறுத்துள்ளார். சட்டப்பேரவைத் தலைவர் அல்லது முதல்வர்
எதுவும் பதில் அளிக்கவில்லை. குறைந்தபட்சம், மூத்த அமைச்சர்களாவது விளக்கம்
தந்திருக்க வேண்டும் என்றார் tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக