அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்பி சசிகலா புஷ்பா, நாடாளுமன்றம் சென்றுவர கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, எம்பி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனையடுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், தனக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்துள்ள உயிர் வாழும் உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.கே.பதக், மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா நாடாளுமன்றம் சென்றுவர வாகனப் பாதுகாப்பு உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த மனு மீது டெல்லி அரசு, மாநகர காவல் ஆணையர், மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளிக்க வேண்டும் என்றும், நவம்பர் 15ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். நக்கீரன்.இன்
மேலும், இந்த மனு மீது டெல்லி அரசு, மாநகர காவல் ஆணையர், மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளிக்க வேண்டும் என்றும், நவம்பர் 15ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். நக்கீரன்.இன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக