புதன், 3 ஆகஸ்ட், 2016

ஜாக்கி வாசுதேவ் ஆச்சிரமம்... உயிர் பயத்தில் உளறும் கீதா ,லதா .. குமுறும் தாய் சத்தியஜோதி



கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் காமராஜ். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர். இவரது மனைவி சத்திய ஜோதி. கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மைய நிர்வாகம் தங்களது இரண்டு மகள்களை வசியப்படுத்தி வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பெற்றோர்கள், தங்களது பெற்றோர்களை மீட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வோம் என்று கூறியுள்ளனர். தனது மூத்த மகளான கீதா, எம்.டெக். லண்டனில் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார். இளைய மகள் லதா பி.டெக். முடித்து இருந்தார். நாங்கள் குடும்பத்தோடு ஈசா யோகா மையத்தில் யோக பயிற்சியில் சேர்ந்தோம். எனது மகள்களை மூலை சலவை செய்த ஜக்கி வாசுதேவ் நான்தான் கடவுள் எனக்கூறி, நய வஞ்சகமாக ஏமாற்றியதோடு, திருமணம் நடக்காமல் இருக்க இருவருக்கும் மொட்டை அடித்து சாமியாராக்கி, காவி உடைகளை அணிவித்து ஆசிரமத்திலேயே தங்க வைத்து விட்டாதாகவும், தங்கள் குழந்தைகளை பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டிய பெற்றோர்கள்,  தான் பெற்ற மகளை பரதநாட்டியம் பயிற்றுவித்து நல்ல படித்த பையனுக்கு திருமணமும் முடித்து கொடுத்தான் ஜாக்கி. ஊரான் வீட்டு குழந்தைகளை மூளை சலவை செய்து... படுபாவி... 

அவர்கள் இருவரையும் மீட்டுத்தருமாறு கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் கீதா மற்றும் லதா ஆகியோர் தங்களது பெற்றோர்களின் குற்றச்சாட்டை மறுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தங்களது விருப்பப்படியே துறவறம் பூண்டு ஈஷா யோகா மையத்தில் சேர்ந்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.நக்கீரன்.in

கருத்துகள் இல்லை: