சென்னை: பழம்பெரும் திரைப்பட இயக்குனர் வியட்நாம்வீடு சுந்தரம்
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில்
காலமானார். அவருக்கு வயது 72.
1970 ஆண்டு வியட்நாம் வீடு படத்தின் மூலம் தமிழ்திரையுலகில் இயக்குனராக நுழைந்தார். அவருக்கு வயது 72. வியட்நாம் வீடு சுந்தரம், எம்.ஜி.ஆர்., சிவாஜி, மற்றும் முத்துராமன், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.
பழம்பெரும்
திரைப்பட நடிகர் வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் காலமானார். உடல்நலக்
குறைவால் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. 1970-ம்
ஆண்டு வியட்நாம் வீடு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் சுந்தரம்
அறிமுகம் ஆனார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற பிரபலங்களுடன்
பணியாற்றியுள்ளார். இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் உள்ளிட்ட
பரிமாணங்களை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வியட்நாம் வீடு' படம் அனைத்துத் தரப்பினரையும், ரசிக்க வைத்த ஒரு வெற்றி படைப்பு. தமிழக அரசால் சிறந்த படம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்ட படம்.
வியட்நாம் மீது அமெரிக்கா படை எடுத்தது. அதனால் வியட்நாம், போர்களமாகக் காட்சியளித்தது. சண்டை தொடர்ந்து நடந்ததால், ஒரு போராட்டமான வாழ்க்கைச் சூழ்நிலை ஏற்பட்டது. அதைப் போல ஒரு பிராமணக் குடும்பத்தில் தினமும் எழும் சண்டை சச்சரவுகள் குழப்பம், ரகளை காரணமாக அந்த வீடே, தினம்தோறும் ஒரு வியட்நாம் போல இருப்பதால் அந்த வீட்டிற்கு அங்குள்ளவர்கள் தேர்வு செய்த பெயர்தான் "வியட்நாம் வீடு'.
நாடகாசிரியர் கே. சுந்தரம் வியட்நாம் வீடு நாடகம் எழுதினார். நாடகம் பிரபலமானது. ஒரு வார இதழில் தொடராகவும் வெளிவந்தது. நாடக ஆசிரியர் சுந்தரம் வியட்நாம் வீடு சுந்தரமானார் இந்த நாடகத்தை திரைப்படமாக எடுத்தனர்.
தமிழின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் திரைக்கதை எழுதியுள்ள இவர் நடிகர் சிவாஜி கணேசனின் விருப்பமான கதையாசிரியர் ஆவார். கௌரவம் உள்ளிட்ட சுமார் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி டிவி சீரியலில் நடித்த வியட்நாம் வீடு சுந்தரம் தற்போது வள்ளி டிவி சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. tamiloneindia.com
1970 ஆண்டு வியட்நாம் வீடு படத்தின் மூலம் தமிழ்திரையுலகில் இயக்குனராக நுழைந்தார். அவருக்கு வயது 72. வியட்நாம் வீடு சுந்தரம், எம்.ஜி.ஆர்., சிவாஜி, மற்றும் முத்துராமன், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.
வியட்நாம் வீடு' படம் அனைத்துத் தரப்பினரையும், ரசிக்க வைத்த ஒரு வெற்றி படைப்பு. தமிழக அரசால் சிறந்த படம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்ட படம்.
வியட்நாம் மீது அமெரிக்கா படை எடுத்தது. அதனால் வியட்நாம், போர்களமாகக் காட்சியளித்தது. சண்டை தொடர்ந்து நடந்ததால், ஒரு போராட்டமான வாழ்க்கைச் சூழ்நிலை ஏற்பட்டது. அதைப் போல ஒரு பிராமணக் குடும்பத்தில் தினமும் எழும் சண்டை சச்சரவுகள் குழப்பம், ரகளை காரணமாக அந்த வீடே, தினம்தோறும் ஒரு வியட்நாம் போல இருப்பதால் அந்த வீட்டிற்கு அங்குள்ளவர்கள் தேர்வு செய்த பெயர்தான் "வியட்நாம் வீடு'.
நாடகாசிரியர் கே. சுந்தரம் வியட்நாம் வீடு நாடகம் எழுதினார். நாடகம் பிரபலமானது. ஒரு வார இதழில் தொடராகவும் வெளிவந்தது. நாடக ஆசிரியர் சுந்தரம் வியட்நாம் வீடு சுந்தரமானார் இந்த நாடகத்தை திரைப்படமாக எடுத்தனர்.
தமிழின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் திரைக்கதை எழுதியுள்ள இவர் நடிகர் சிவாஜி கணேசனின் விருப்பமான கதையாசிரியர் ஆவார். கௌரவம் உள்ளிட்ட சுமார் பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி டிவி சீரியலில் நடித்த வியட்நாம் வீடு சுந்தரம் தற்போது வள்ளி டிவி சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. tamiloneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக