வியாழன், 4 ஆகஸ்ட், 2016

டயட் கோலா டயட் பெப்சி... மூளைக்கு தவறான உத்தரவுகளை கொடுத்து தவறான ஹார்மோன்களை சுரக்க செய்து...

நியாண்டர் செல்வம்நியாண்டர் செல்வம்: டயட் கோக், டயட் பெப்ஸி போன்றவற்றில் சர்க்கரை இல்லை, பூஜ்யம் கலோரி…ஆனால் அவற்றை குடித்தால் என்ன ஆகும்?
இப்படி செயற்கை சுவையூட்டிகள் (ஸ்ப்ளெண்டா, ஆஸ்பர்டாமி, ஸ்டீவியா) ஆகியவை சர்க்கரை உள்ள நார்மல் பானங்களை விட அதீத அளவில் ரத்த சர்க்கரை அளவுகளையும், எடையையும் ஏற்றுவதாக தெரியவந்துள்ளது. 90களில் இது குறித்த பெருத்த சர்ச்சை எழுந்தது. டயட் கோக், டயட் பெப்ஸி விற்பனை இம்மாதிரி சர்ச்சைகளால் பாதிப்படைவதை கண்ட கம்பனிகள் கோபமடைந்தன. செயற்கை சுவையூட்டிகளுக்கும், எடை அதிகரிப்புக்கும் இடையே உள்ள தொடர்பை சில ஆய்வுகள் ஆராய்ந்தன. சிலவற்றில் செயற்கை சுவையூட்டிகளால் எடை ஏறுகிறது எனவும், சிலவற்றில் இல்லை எனவும் வந்தன.

ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வு “செயற்கை சுவையூட்டிகளால் எடை எப்படி ஏறுகிறது” என்பதை விளக்கியுள்ளது.
இந்த செயற்கை சுவையூட்டிகள் நம் பெரும்குடலில் உள்ள ப்ரொபயாடிக் பாக்டிரியாக்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. இதனால் ஆண்டிபயாடிக் சாப்பிட்ட விளைவு உருவாகி கட் பாக்டிரியா பாதிப்படைந்து எடை ஏறுகிறது. அதுமட்டுமல்ல ரத்த சர்க்கரை அளவுகளும் ஏறுகிறது. அந்த எலிகளுக்கு உயர் கொழுப்பு உணவு கொடுக்கப்பட்டு கூட இந்த செயற்கை சுவையூட்டிகள் கொடுக்கப்பட்டபோதும், இதுதான் விளைவு.
அதுமட்டுமல்ல, சர்க்கரையை கண்ணிலேயே கூட காட்டாமல் 4 கேன் கோக்குக்கு ஒப்பான அளவு செயற்கை சுவையூட்டிகளை மட்டுமே கொண்டு எலிகளுக்கு வெற்றிகரமாக டயபடிஸும் வரவழைக்கபட்டுள்ளது.
பல்வேறு செயற்கை சுவையூட்டிகள் (சாக்ரின், ஸ்பெளென்டா, ஸ்டிவியா) ஆய்வு செய்யப்பட்டபோதும் விளைவுகள் மாறவில்லை.
எலிகளிடையே ஆய்வு நடத்தியபின் மனிதர்களிடையேயும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதுவரை செயற்கை சுவையூட்டிகளை தொட்டிராத ஏழுபேர் ஆய்வுக்கு அழைக்கப்பட்டனர். ஒரு வாரம் செயற்கை சுவையூட்டிகளை உண்டபின் எழுவரில் நால்வருக்கு ரத்த சர்க்கரை அளவுகள் கணிசமாக அதிகரித்தன,.
ஆய்வு முடிவுகள் வெளிவந்தவுடன் “சர்வதேச உணவு கவுன்சில்” (பன்னாட்டு கம்பனி உணவு லாபி) இதை கடுமையாகக் குறைகூறியது. அவர்கள் வேறு என்ன சொல்வார்கள்? ஆனால், டயட் சோடாக்களின் விற்பனை தொடர் சரிவுக்குளாகி வருவதால் இக்கம்பனிகள் கவலையடைந்துள்ளன.
நியாண்டர் செல்வம், பேலியோ டயட் நூலின் ஆசிரியர்.  thetimestamil.com

கருத்துகள் இல்லை: