திமுக., எம்.பி. திருச்சி சிவாவை, அதிமுக., எம்.பி. சசிகலா புஷ்பா தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு மாநிலங்களவையில் பேசிய சசிகலா புஷ்பா, “எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனது பதவியை ராஜினாமா செய்யும்படி எனது கட்சித் தலைமையால் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். என்னை எனது தலைவர் அறைந்தார்” என பேசியது அரசியல் அரங்கில் இன்னும் பரபரப்பை கூட்டியது. இதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம், தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் இந்திய அரசியலிலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சசிகலா புஷ்பா எம்.பி., முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு கிளப்புவதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெரம்பலூர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பாண்டியன் சார்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, பாண்டியன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் இன்று திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனனை சந்தித்து மனுக்கொடுத்தனர்.
பூனைக்கு மணி கட்டுவது யாரு என்பதில் எல்லோரும் ஆர்வமாக இருந்தார்கள் அதிருப்தி admk ஆட்கள் , இப்போது மணி கட்டியாச்சு . இதில் எலி பெரிசா என்பது முக்கியமில்லை . count down ஸ்டார்ட்ஸ். அடக்குமுறை ஒரு உச்சத்தை எட்டிய பிறகு சரிவை சந்தித்து தான் ஆக வேண்டும். .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக