அதிமுக
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சசிகலா புஷ்பா, தன் ஆண் நண்பருடன்
செல்போனில் பேசிய ஆடியோ வாட்ஸ் அப்பில் பரவியது. நேற்று கொஞ்சம் ஓவரா
ஆயிடுச்சி. எப்ப போன வைச்சேன்னு தெரியல என்று பேசியது, சட்டமன்றத்
தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும். இது அதிமுகவுக்கு சரிவை கொடுக்கும் என்று
விமர்சனம் எழுந்தது.
;இந்தநிலையில் திருச்சி சிவாவுடன், சசிகலா புஷ்பா போஸ் கொடுத்த புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் பரவியது. அப்போது இது மார்பிங் என இருதரப்பும் கூறியது. இதையடுத்து சசிகலா புஷ்பாவை மாநில மகளிரணி செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. அதன் பின் இவருக்கு கட்சியில் முக்கியத்துவம் குறைந்தது. சிறிது காலம் அமைதியாக இருந்த சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவின் கவனத்தை கவர்ந்து கட்சியில் மீண்டும் தன்னை நிலைநிறுத்த யோசித்தார். அந்த யோசனையின் விளைவுதான் டெல்லி ஏர்போர்ட்டில் திருச்சி சிவாவின் கன்னத்தில் 4 முறை பளார் விட்டார். அதிமுக ஆட்சியையும், ஜெ.வை தரக்குறைவாக பேசியதாலும் தாக்கியதாக கூறினார். அதிமுக, திமுக எம்பிக்கள் இடையேயான இந்த களேபரம் டெல்லி ஏர்ப்போட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொதுஇடத்தில் எப்போதும் நாகரீகமாக நடந்து கொள்ளும் திருச்சி சிவா, இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார் என்று நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த மறுநாள் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. அங்கு என்ன நடந்தது என்பது மர்மமாக இருந்தது. போயஸ் கார்டனில் இருந்து நேராக பலத்த கண்காணிப்புடன் டெல்லிக்கு அனுப்பட்டார் சசிகலா புஷ்பா.
இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 1) காலை மாநிலங்களவை கூடியதும் யாரும் கொஞ்சமும் எதிர்பார்த்திராத வகையில், ஆவேசத்துடன் மைக் முன் வந்தார் சசிகலா புஷ்பா. எனது எம்பி பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி எனது சக எம்பிக்களும், கட்சி தலைமையும் வலியுறுத்துகிறது. எனது கட்சித் தலைவரே சென்னையில் என்னை பளார் என்று அறைந்தார். எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு இந்த அவை உரிய பாதுகாப்பு தர வேண்டும் என பேசியவர், கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார். இவரது பேச்சுக்கு அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சசிகலா புஷ்பாவின் ஆவேச பேச்சு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும்போதே அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் ஜெயலலிதா.
பாராளுமன்றத்தில் இருந்து ஒருவித அச்ச உணர்வுடன் வெளியேறிய சசிகலா புஷ்பா, நேராக தனது இல்லத்திற்கு சென்றார். அங்கு ஊடகத்தினரை சந்தித்து, எனக்கு ஆதரவாக குரல் எழுப்பிய காங்கிரஸ் நண்பர்களுக்கும், திமுக தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக சோனியாஜி, ராகுல்ஜி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றி என்று சொல்லிவிட்டு, அடுத்து வீசியதுதான் அணுகுண்டு ரகம்.
விசாரணை என்ற பெயரில் ஒரு நாள் முழுக்க ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட அறையில் என்னை அடைத்து வைத்து மாறி மாறி அடித்தார் ஜெயலலிதா. ராஜினாமா கடிதம் கொடுக்கும்படி சசிகலாவும் சேர்ந்து கொண்டு என்னை கடுமையாக தாக்கினார். தரையில் உட்கார வைத்து கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தார் ஜெயலலிதா.
;ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனும் சேர்ந்துகொண்டு என்னை சரமாரியாக தாக்கினார். உவரியில் இருக்கும் என் கணவரின் வீடு தாக்கப்பட்டது. அவருடைய டிராக்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த தகவல்கள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. என்ன ஆனாலும் சரி நான் எனது எம்பி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். ராஜினாமா செய்தால் நான் பயந்து விட்டதாக நினைப்பார்கள் என கண்ணீரும், கம்பலையுமாக கூறினார்.;
;ஜெ., சொன்னதை கேட்டு ராஜினாமா செய்யாமல், தில்லாக நின்று, ராஜினாமா செய்ய முடியாது என்று சசிகலா புஷ்பா விட்டுள்ள சவால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக