
அதே நேரத்தில் டெல்லி வீட்டை விட்டு வெளியில் வந்த சசிகலா புஷ்பா “தனது உயிருக்கு ஆபத்து உள்ளது, தனக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும்” எனக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது விசாரித்த நீதிபதிகள் சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உள்துறை, டில்லி மாநில அரசு மற்றும் மாநகராட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்போதைக்கு டெல்லியில் இருக்கும் சசிகலா புஷ்பா எப்போது சென்னைக்கு வந்தாலும் கைது செய்யப்படுவார். இப்போதைக்கு அதிமுக தலைமையிடம் இருந்து தப்பிக்க அவர் ஏதாவது ஒரு பெரிய கட்சியிடம் சரணடைய வேண்டும் இப்போதைக்கு அம்மாதிரிச் சூழல் எதுவும் இல்லாத நிலையில் அவர் டெல்லியை விட்டு தமிழகம் வந்தால் நடவடிக்கைகள் அவர் மீது பாயும்.
சசிகலாவுடன் யாரெல்லாம் நெருக்கமான தொடர்பில் இருந்தார்கள் என்ற பட்டியலை அதிமுக தலைமை எடுத்து வருவதாகவும் விரைவில் அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என்றும் தெரிகிறது. இதுவரை முதல்வருக்கு நெருக்கமானவர் என்பதால் புகார் கொடுக்காமல் இருந்தவர்கள் கூட இனி சசிகலா புஷ்மா மீது அடுத்தடுத்து புகார்களைக் கொடுக்க முன் வருவார்கள். மின்னம்பலம்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக