அதிமுக-வினர்
முதல்வரைப் புகழ்ந்து பேசுவதும், ஒவ்வொரு அறிவிப்பின்போதும்
எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடுவதும் தமிழக சட்டப்பேரவையில் தினசரி
வாடிக்கையாகிவிட்டது. பேரவையில், இன்று எரிசக்தித் துறை, மதுவிலக்கு
மற்றும் ஆயத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய
அதிமுக உறுப்பினர் முத்தையா, 89 வயக்காட்டு பொம்மைகள் என்று திமுக-வினரைப்
பார்த்து விமர்சனம் செய்து பேசினார்.
இதையடுத்து, அதிமுக உறுப்பினர் முத்தையாவின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து திமுக, காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவை அலுவல்கள் முடிந்துவிட்டன. மின்சார கோரிக்கைமீதான பதிலுரை நாளை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையிலும் திமுக உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், முத்தையா பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென முறையிட்டோம். ஆனால், சபாநாயகர் அவைக்குறிப்பிலிருந்து நீக்கவில்லை. நான் பேசும்போது 131 கொத்தடிமைகள் என்று பேசினேன். அதை மட்டும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார் சபாநாயகர். சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ள கடைசி வரை போராடினோம். ஆனால், சர்வாதிகார மனப்பான்மையுடன் சபாநாயகர் செயல்படுகிறார் என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ராமசாமி கூறுகையில், இதுபோன்ற சம்பவம் சட்டப்பேரவையில் இதுவரை நடந்தது இல்லை என்று அவர் கூறினார். மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக