உத்திரப்பிரதேச மாநிலம், மெய்ன்புரியில் 100 ரூபாய் லஞ்சம் கொடுக்க மறுத்த இருவர் அடித்துக் கொல்லப்பட்டதால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் போலீசாரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஒன்று செங்கல் கற்களை ஏற்றி வந்த டிராக்டர், போலீசாரின் செக் போஸ்ட் தடுப்பு பலகையின் மீது மோதியது. பின்னர் டிராக்டரில் இருந்த இருவர் தப்பித்து ஓடி அருகில் இருந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினர். ஆனால் 100 ரூபாய் லஞ்சம் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பானதாகவும், அதில் இருவரை போலீசார் அடித்து கொன்றதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உடலில் காயங்கள் இருப்பதால் அவர்கள் தாக்கப்பட்டு இறந்த பின்னரே குளத்தில் வீசப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சம்மந்தப்பட்ட போலீசாரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நக்கீரன்.இன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக