தன்னை அதிமுக தலைமையில் இருக்கும் ஜெயலலிதா, கன்னத்தில் அறைந்ததாக
பரபர குற்றச்சாட்டை வைத்தார் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா.
அதிமுக தலைமை அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிருந்து நீக்கியது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா புஷ்பா, “சென்னை போயஸ் தோட்டத்தில் நான் ஒரு நாயைப் போல அடைத்து வைக்கப்பட்டேன் வெளியில் என்னுடைய குடும்பத்தினர் காரில் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் பேசுவதற்கு கூட என்னை அனுமதிக்கவில்லை.
அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இனி நான் சுதந்திரமாக செயல்பட முடியும்.ஆ னால் தற்போது என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அதிமுக தலைமையில் இருந்து கடந்த இரண்டு மாத காலமாகவே என்னை ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள். நான் அதற்கு மறுக்கவே தற்போது இந்த விவகாரத்தை வைத்து எனக்கு எதிராக செயல்படுகின்றனர். நான் ஒருபோதும் எனது பதவியை ராஜினாமா செய்யமாட்டேன். எனக்காக குரல் கொடுத்த காங்கிரஸ், திமுக, பாஜகவினர்களுக்கு நன்றி” என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக