உலக அளவில் பிரபலமாக உள்ள ஈஷா மையத்தின் மீது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த முனைவர் காமராஜ், கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், தனது இரு மகள்களையும் மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். என்ன விவகாரம் இது?
அடிமைகளாக எனது மகள்கள்!<">முனைவர் காமராஜின் மகள்களான கீதா, லதா இருவரும் ஈஷா யோகா மையத்தில் சேர்ந்தனர். எம்.டெக்., பி.டெக் முடித்து பெரிய நிறுவனங்களில் பணி புரிந்த இவ்விருவரையும், மூளைச் சலவை செய்து, மொட்டையடித்து, சாமியாராக்கி, நான்தான் கடவுள் எனச் சொல்லி நயவஞ்சகமாக ஏமாற்றி விட்டார் ஜக்கி வாசுதேவ் என்று புகாரில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மேலும், தங்களது சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில், மகள்கள் இருவரையும் அடிமை போல நடத்தி வருகிறார் ஜக்கி வாசுதேவ் என்றும் கூறியிருக்கிறார் காமராஜ்.
அமாவாசை பவுர்ணமி நாட்களில் ஊக்க மருந்து கொடுத்து, 30 கி.மீ. தூரம் நடக்க வைத்து கொடுமைப்படுத்துகிறார். ஈஷா மையத்துக்கு வருபவர்களை கவர்வதற்காக, தன் மகள்கள் இருவரையும் விற்பனையாளரைப் போல பயன்படுத்துகிறார். ஈஷா பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுப்பதால், பெற்றோரை பார்க்கும் போது சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது தொடர்ந்தால், அந்தக் குழந்தைகள் கோமா நிலைக்குத் தள்ளப்படுவர் என்று குற்றச்சாட்டுக்களை அடுக்குகிறார் காமராஜ்.
அபாயகரமான இந்தக் கொடுமைகளைத் தடுத்து, தனது மகள்களை மீட்டுத் தர வேண்டும் என்று தன் மனைவியுடன் சென்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுத்திருக்கிறார் காமராஜ்.
தனது மனைவியையும் மகள்களையும் மூளைச் சலவை செய்து விட்டார் ஜக்கி வாசுதேவ் என கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பரமேஸ்வரன் சில வருடங்களுக்கு முன் இதே ரீதியில் காவல் துறையிடம் புகார் கொடுத்தார்.>வசியம் பண்ண முடியாது!
நாம் கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தை தொடர்பு கொண்டோம். சரவணன் என்பவர் பேசினார். “எல்லாமே தவறா சொல்லுறாங்க. புகார் கொடுத்த நபரை எங்ககிட்ட பேசச் சொல்லுங்க. எதற்கும் உங்க செல்போன் நம்பரை கொடுங்க.” என்றார். ‘பேராசிரியர் காமராஜ் கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு ஈஷா யோகா மையம் பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறது.’ என்பதை வலியுறுத்தினோம். மக்கள் தொடர்பாளர் பாலச்சந்திரன் நம் லைனுக்கு வந்தார். “இப்பல்லாம் யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி எதுவும் செய்ய முடியாது. வசியம் (mesmerize) பண்ணவும் முடியாது.
ஈஷா சென்டரை இதுவரைக்கும் 18 லட்சம் பேர் ‘கிராஸ்’ பண்ணிருக்காங்க. விவேகானந்தர்கள் உருவாகணும்னு சொல்வாங்க. ஆனால், தங்கள் வீட்டிலிருந்து ஒரு விவேகானந்தர் உருவாவதை விரும்ப மாட்டார்கள். நம்ம வீட்டு பிள்ளைகள் நம்ம சொல்லுறத கேட்கணும்னு பெற்றோருக்கு ஆதங்கம். இதுதான் பிரச்சனை. வேற ஒண்ணுமில்ல. கீதாவும் லதாவும் 7 வருஷமா இங்கேயே இருக்காங்க. வார வாரம் அவங்க அம்மா வந்து பார்த்துட்டு போறாங்க. நைட்ரஸ் ஆக்சைடு அது இதுன்னு அவங்க கிளப்பி விடறதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டுக்கள்.” என்று மறுத்தார்.
“அங்கு நடப்பதெல்லாம் ஆன்மிக மயமாகத் தெரியவில்லை. மாயமாகவே இருக்கிறது!” என்று அவ்வப்போது குற்றச் சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
சி.என்.இராமகிருஷ்ணன் nakkeeran,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக