இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், முன்பு தீண்ட தகாதவர்களாக அறியப்பட்ட தாழ்த்தப்பட்ட இனமான தலித் சமூகத்தை சேர்ந்த சுமார் 25,000 பேர் தங்கள் சமூகத்தினர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.
மூன்று வாரங்களுக்கு முன், தோலை உரிப்பதற்காக இறந்த மாட்டை எடுத்து சென்றதற்காக நான்கு இளைஞர்கள் பொது வெளியில் ஆடைகள் களையப்பட்டு தாக்கப்பட்டனர்.
இறந்த விலங்குகளை அப்புறப்படுத்துதல் மற்றும் சாக்கடைகளை கைகளால் சுத்தப்படுத்துவது போன்ற பாரம்பரிய வேலைகளை இனி செய்யப்போவதில்லை என பேரணியில் கலந்து கொண்டவர்கள் உறுதி மொழி எடுத்துள்ளனர்.
இந்த பேரணியை ஒருங்கிணைத்த இளம் ஆர்வலர் ஜிக்நேஷ் மேவனி கூடியிருந்தவர்களிடம், தலித்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள துப்பாக்கிகள் தேவை என்றார்.
இந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக