வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

ஜெயலலிதாவின் பாசிச அடக்கு முறைக்கு எதிராகத்தான் சசிகலா புஷ்பா போர்க்கொடி தூக்கினார் ! ஜனநாயக சக்திகள் துணை நிற்கவேண்டும் !

சசிகலா புஷ்பா இன்று ஒரு முக்கியமான வரலாற்று திருப்பத்தில் இருக்கிறார். பாசிச குணாம்சமும் பார்ப்பனீய பின்பலமும் உள்ள ஒருவர் தமிழகத்தின் முதல்வர் மட்டும் அல்ல மிகவும் பணபலம் செல்வாக்கு எல்லாம் பெற்று அசைக்க முடியாத ஒரு சர்வாதிகாரியாக இருக்கிறார். பெரும் தலைவர்களும் ஊடகங்களும் அவரின் காலடியில் விழுந்து வணங்கி அடிமைகளாகி விட்டனர்.
அப்படிப்பட்ட ஜெயலலிதாவை அவரது கட்சியிலேயே ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினர் எதற்கும் துணிந்து எதிர்குரல் கொடுக்கிறார் என்றால் நிச்சயம் ஜனநாயக சக்திகள் எல்லாம் அவருக்கு உறுதுணையாக நிற்கவேண்டும்.
ஆனால் நடப்பது என்ன? சசிகலா புஷ்பாவின் அந்தரங்க படங்கள் என்று சிலவற்றை பிரசுரித்து அவரது காரக்டரை சிதைக்கும் முயற்சியில் ஜெயலலிதாவை குஷ்ப்படுத்துகின்றனர்
காரணம் எதுவாக இருந்தாலும் சசிகலா புஷ்பா ஜெயலலிதாவின் அடக்குமுறை பாசிசத்துக்கு எதிராகத்தான் போர்க்கொடி தூக்கி உள்ளார்.
அதற்காகவே அவரை பாராட்டவேண்டும்.

சசி புஷ்பாவை எதிர்ப்பவர்கள் அவரை பெண் என்ற ஒரு காரணத்துக்காகவும் எதிர்க்கிறார்கள் என்பதை இங்கு ஆணித்தரமாக கூறி வைக்க விரும்புகிறேன்.
ஜெயலலிதாவிடம் இல்லாத கவர்ச்சி படங்களா? வேறு தலைவர்களிடம் இல்லாத கிசு கிசு கதைகளா?
அப்படி என்ன தவறு சசிகலா புஷ்பாவிடம் கண்டு விட்டீர்கள்?
அடிமை மனிதர்களுக்கு ஒருவர் அடிமைத்தளையை உடைந்து கொண்டு வெளியேறுவதை காண்கையில் ஒரு பொறாமை ஏற்படும் சிலருக்கு ஏற்பட்டிருப்பது அதுதான்.


நமக்கு வாய்த்த அடிமைகள் பாவம் என்ன செய்வார்கள்?
விசுவாசத்தை காட்ட சசி புஷ்பா மீது எகிறி எகிறி பாய்வார்கள்!

கருத்துகள் இல்லை: