தமிழக
காங்கிரஸ் தலைவர் நியமனம் செய்யப்படாததற்கு, மேலிடப் பொறுப்பாளர் முகுல்
வாஸ்னிக் தான் காரணம்,'' என, முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார்.
ஐம்பது
நாட்களுக்கு முன், தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து, இளங்கோவன்
விலகினார். அதன்பின் சென்னை, சத்திய மூர்த்தி பவன், தொண்டர்கள் வருகையில்லா
மல் வெறிச்சோடிக் கிடந்தது. >ஆலோசனை:
இந்நிலையில், நேற்று காலை,
இளங்கோவன், சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அது தெரிந்ததும்,
நிர்வாகிகளும், தொண்டர்களும் வந்தனர். அவர்களுடன், கட்சி நிலைமை
குறித்துஆலோசித்தார்.பின், அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசு கொண்டு
வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவில், காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,
முன்வைத்த சில திருத்தங்களை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. எனவே, அந்த
மசோதாவை ஆதரித்தோம். சிதம்பரம் சாத்தான் சத்தம் போடாமல் வேலை பார்க்கிறது. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, அந்த மசோ தாவை கடுமையாக எதிர்த்துள்ளது.
சுயநலத்துக்காக, சில கடுமையான நிபந்தனைகளை விதித்து, அதை மத்திய அரசு ஏற்காமல் இருந்திருக்கலாம். அதன் விளைவாக, மசோதாவை எதிர்த்து,
அ.தி.மு.க., வெளிநடப்பு செய்துள்ளது. போன் எடுப்பதில்லை மிழக காங்கிரசுக்கு, புதிய தலைவர் நியமிக்கப்படாமல், இழுபறி நீடிப்பது வருத்தமாக உள்ளது. இந்த இழுபறிக்கு, கட்சியின்மேலிட பொறுப்பாளரும், பொதுச் செயலரு மான முகுல் வாஸ்னிக் தான் காரணம்.
தமிழகத்தில் இருந்து, அவரை யாரும் தொடர்புகொள்ள முடியவில்லை. யார் போன் செய்தாலும் எடுப்பதில்லை. இவ்வாறு இளங்கோவன் கூறினார்.- நமது நிருபர் - தினமலர்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக