புதன், 3 ஆகஸ்ட், 2016

ஜெயலலிதாவின் பிரதமர் கனவை தகர்த்த சசி புஷ்பா! பின்வாங்கும் ஜெயா தூது விடுகிறார்... ஜாக்கிரதை

டிஜிட்டல் திண்ணை-‘அம்மா மனசு உங்களுக்குத் தெரியாதா?’ - சசிகலா புஷ்பாவை சமாதானப்படுத்தும் அதிமுக! செவ்வாய், 2 ஆக மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போஸ்ட் செய்யப்பட்டு இருந்தது. லொக்கேஷன் டெல்லி என்று காட்டியது.
“அதிமுக எம்.பி-யான சசிகலா புஷ்பா, கொளுத்திப்போட்ட பட்டாசு. நான்ஸ்டாப் ஆக வெடித்துக்கொண்டே இருக்கிறது. ‘என்னை போயஸ் கார்டனுக்கு அழைத்து ராஜினாமா செய்யச் சொல்லி துன்புறுத்தினார்கள். கட்சியின் தலைவர் என்னை கன்னத்தில் அறைந்தார். ஆனால், நான் ராஜினாமா செய்யமாட்டேன்’ என்று சொல்லி, பரபரப்பைக் கிளப்பினார் சசிகலா புஷ்பா.
டெல்லியில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது கணவரும், மகனும் டெல்லியில் உள்ள வீட்டில்தான் தங்கியிருக்கிறார்கள். அந்த வீட்டில் இருந்துதான் நேற்று மீடியாவுக்கு பேட்டி கொடுத்தார் சசிகலா புஷ்பா. மாலை அந்த பரபரப்பு ஓய்ந்தபிறகு, சசிகலா புஷ்பாவின் வீட்டுக்குப் போயிருக்கிறார் கோவை எம்.பி-யான நாகராஜன்.    இப்படிதான் முன்பு  ஐ ஏ எஸ் அதிகாரி சந்திரலேகாவுக்கு அசிட் அபிஷேகம் செய்து விட்டு பின்பு அந்த வழக்கை டைவேர்ட் பண்ண அதே சந்திரலேகாவை சென்னை மேயர் தேர்தலில் ஆதரித்து  ஒரே அடியாக கவுத்து விட்டார் . இப்போ சசிகலாபுஷ்பாவின் அதிரடி தாக்குதல் வடநாட்டில்  தனது இமேஜை தகர்த்துவிட்டதே? எதிர்கால பிரதமர் கனவுக்கு   நல்லதில்லையே என்று புஷ்பாவிடம் பதுங்கி பம்முகிறார் .. இந்த விஷப்புலி  பதுங்குவது  பிராண்டத்தான் ...

முதலில், அவரை சந்திக்க சசிகலா புஷ்பா மறுத்துவிட்டாராம். பிறகு, சசிகலா புஷ்பாவின் கணவரிடம் மன்றாடி அவரைப் பார்த்திருக்கிறார் நாகராஜன். அப்போது, ‘அம்மாவுக்கு கோபம் வருவதைப்பற்றி உங்களுக்குத் தெரியாதா? அவங்க கோபப்பட்டு பேசிட்டாலும் பிறகு, நமக்கு நல்லதுதானே செய்வாங்க. அப்படியே உங்களை அடிச்சிருந்தாலும் யாரு அடிச்சாங்க… நம்ம அம்மாதானே.. அதைப் போய் நீங்க வெளியில சொல்லணுமா? அவங்க உங்களை இந்தப் பதவியை ராஜினாமா செய்யச் சொல்றாங்கன்னா இதைவிடப் பெரிதாக உங்களுக்கு ஏதோ கொடுக்கப் போறாங்கன்னுதானே அர்த்தம். தூத்துக்குடி மேயராக இருந்த உங்களை அந்தப் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லிட்டுத்தானே எம்.பி-யாக்கி டெல்லிக்கு அனுப்பினாங்க. அம்மாவோட மனசப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? அவங்க ராஜினாமா செய்யச் சொன்னால் அதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். ஒருவேளை, அரவக்குறிச்சி அல்லது திருப்பரங்குன்றம் தொகுதியில உங்களை நிக்க வெச்சு, அமைச்சர் ஆக்கலாம்னுகூட அவங்க நினைச்சிருக்கலாம். நீங்கதான் அவசரப்பட்டு எல்லாத்தையும் கெடுத்துட்டீங்க.. தம்பிதுரை அண்ணனும் ரொம்பவும் வருத்தப்பட்டாரு. எங்கேயோ, ஊருல அடையாளம் தெரியாம இருந்த நம்மை டெல்லிக்கு நாடாளுமன்றத்துல பேச அனுப்பி வெச்சது அம்மாதானே… அவங்களுக்கு கொஞ்சமாவது நாம நன்றியோட இருந்திருக்க வேண்டாமா! அவங்க அடிச்சாங்கன்னு சொல்லி, நீங்க எதுக்கு வருத்தப்பட்டீங்க. அவங்க கை உங்கமேல பட்டதுக்கு கொடுத்து வெச்சிருக்கணும்.

(சசிகலா புஷ்பா)
இப்பவும் எதுவும் கெட்டுப்போயிடல… உங்க பதவியை ராஜினாமா செஞ்சுட்டு, நேராகப் போய் அம்மா காலில் விழுந்துடுங்க. அவங்க மன்னிச்சிடுவாங்க…’ என்று சொல்லி, வகுப்பெடுத்திருக்கிறார் நாகராஜன்.
‘இதுக்குமேல இதுல பேசுறதுக்கு எதுவும் இல்ல. எல்லாம் முடிஞ்சுபோச்சு…’ என்று பட்டும்படாமல் பேசியிருக்கிறார் சசிகலா புஷ்பா.
‘நான் சொல்றதை சொல்லிட்டேன். இனி, உங்க இஷ்டம். நீங்களாவது உங்க வீட்டுக்காரம்மாவுக்கு புத்திமதி சொல்லுங்க…’ என்று சசிகலா புஷ்பாவின் கணவரைப் பார்த்து சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம் நாகராஜன்.
சசிகலா புஷ்பாவின் பல்ஸ் பார்ப்பதற்கு, தம்பிதுரைதான் நாகராஜனை அனுப்பிவைத்தார் என்று சொல்கிறார்கள்!” என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ்.
அதற்கு லைக்போட்ட கையுடன், காப்பி செய்து ஷேரும் செய்தது வாட்ஸ் அப். தொடர்ந்து கமெண்டில், “ஜெயலலிதா என்ன நினைக்கிறாங்க?” பதிலை அடுத்த ஸ்டேட்டஸ் ஆக அப்டேட் செய்தது ஃபேஸ்புக்.

(கோவை எம்.பி நாகராஜன்)
“சசிகலா புஷ்பா நேற்று மாநிலங்களவையில் கதறி அழுதபோது, ஜெயலலிதா சட்டமன்றத்தில் இருந்தார். அவருக்கு உடனடியாக இந்தத் தகவல் சொல்லப்பட்டது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சசிகலா புஷ்பாவை நீக்கச்சொல்லி ஜெயலலிதா தகவல் சொன்னது எல்லாமே சட்டமன்றத்தில் இருந்துதான். அதன்பிறகு, சட்டமன்றம் முடிந்து போயஸ் கார்டன் வந்தபிறகுதான், டெல்லியில் நடந்த சம்பவங்களை கேட்டுத் தெரிந்துகொண்டாராம். டி.வி.யில் வந்த சசிகலா புஷ்பாவின் பேட்டியையும் ஜெயலலிதா பார்த்திருக்கிறார். ‘அந்த லேடி இப்படி செய்வான்னு தெரியாதுக்கா…’ என்று சசிகலா சொன்னபோதும், ஜெயலலிதா அமைதியாகத்தான் இருந்தாராம். இரவு டெல்லியில் இருந்து தம்பிதுரை கார்டனுக்குப் போன் செய்திருக்கிறார்.
அவரோடு சில நிமிடங்கள் ஜெயலலிதா பேசியதாகச் சொல்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டில் தற்போது வழக்கு நிலுவையில் இருக்கும்போது, டெல்லி மீடியாவில் அவரைப் பற்றி இப்படி ஒரு தவறான இமேஜ் வருவதை அவர் விரும்பவில்லை. அது சம்பந்தமாகத்தான் தம்பிதுரையுடன் டிஸ்கசன் நடந்திருக்கிறது என்றும் தகவல்.
இதற்கிடையில் சசிகலா புஷ்பா, காங்கிரஸுக்குப் போகிறார். அவரை இயக்குவதே காங்கிரஸ்தான் என்ற ஒரு தகவலும் கார்டனுக்குப் போயிருக்கிறது. எல்லாவற்றையும் ஜெயலலிதா கேட்டுக்கொண்டாலும், கார்டனில் இதுதொடர்பாக யாரிடமும் பேசவில்லையாம். இன்று சட்டமன்றத்துக்கு வந்தபோதும் ஜெயலலிதாவிடம் உற்சாகம் இல்லை. சற்று சோர்ந்த முகத்துடன்தான் இருந்தார்.

(தம்பிதுரை)
இதற்கிடையில் கட்சியைவிட்டு ஒருவர் நீக்கப்பட்டால் அல்லது கட்சி மாறினால் எம்.பி. பதவி பறிக்கப்படுமா என்ற ஆலோசனை, அதிமுக-வின் லீகல் டீம் நடத்தியிருக்கிறது. ‘மாநிலங்களவை உறுப்பினரை அப்படி கட்சியிலிருந்து நீக்கினாலோ அல்லது அவராகவே கட்சியிலிருந்து விலகினாலோ அவரது பதவியைப் பறிக்க வாய்ப்பு இல்லை. அவராகவே முன்வந்து ராஜினாமா செய்தால் மட்டுமே உண்டு என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது’ என்ற லீகல் தகவலும் கார்டனுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்கிறார் ஜெயலலிதா! அவர் மனதில் என்ன இருக்கிறதோ?” என்ற ஸ்டேட்டஸைப் படித்து லைக் போட்டுவிட்டு, ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப். ஃபேஸ்புக்கும் சைன் அவுட் ஆனது.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: