சென்னை நுங்கம்பாக்கம் ரயில்
நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில்
ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராம்குமார்
குற்றவாளி என ஆரம்பத்தில் இருந்தே கூறிவரும் ராம்குமாரின் வழக்கறிஞர்
ராமராஜ் புதிதுபுதிதாக பல்வேறு குற்றாச்சாட்டுகளை வைத்து வருகிறார்.>தற்போது, சுவாதி 14 சிம்கார்டுகள்
பயன்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் அவர் பயன்படுத்திய 14 சிம்கார்டுகள்
மற்றும் லேப்டாப் குறித்த தகவல்கள் எங்கே என கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த கொலை வழக்கை விரைந்து முடிக்க நீதித்
துறையும், காவல்துறையும் துணைக்கு அழைப்பதாக குற்றம்சாட்டிய அவர்,
ராம்குமார் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க தேவையான தகவல்களை தான்
திரட்டி வருவதாக கூறினார். சுவாதி 14 சிம்கார்டுகள் பயன்படுத்தியதாக
வழக்கறிஞர் ராமராஜ் கூறியது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெப்துனியா.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக