சனி, 6 ஆகஸ்ட், 2016

வெறுமையுடன் காட்சியளிக்கும் Torrentz.eu இணையதளம்


டைட்டிலில் இருக்கும் ‘இனியும் நெட் உலகத்தில் வாழ வேண்டுமா?’ என்ற புலம்பல் மன உணர்வை ஒவ்வொரு நெட்டிசன்களும் தங்கள் விரல்களால், கீபோர்ட் மூலம் டிஜிட்டல் உணர்வாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். ஏன் இந்த பதற்றம்?
ஒவ்வொரு வெப்சைட்டாக டோரண்ட்களைத் தேடிச் செல்ல கஷ்டப்படும் யூசர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மெட்டா-சர்ச் என்ஜின் Torrentz.eu. குறிப்பிட்ட டோரண்டை தேடும்போது இணையத்தில் கிடக்கும் எண்ணற்ற தகவல்கள் அனைத்தையும் கொண்டுவந்து திரையில் கொட்டாமல், நம்பகத்தன்மையான டோரண்ட்களை மட்டும் தனியாக பிரித்து யூசர்களுக்குக் கொடுக்கும் வேலையை, 2003இல் தொடங்கி, கடந்த 13 வருடங்களாக செய்துவந்த Torrentz.eu தற்போது விடை பெற்றுவிட்டது.


கடந்த மாதம் உலகப் புகழ்பெற்ற KAT என செல்லமாக அழைக்கப்பட்ட KickAssTorrents இணையதளத்தின் உரிமையாளர் போலாந்தில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இணையதளம் முடக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது Torrentz.eu தனது சர்வீஸை முடித்துக் கொண்டு இணையதள வாழ்விலிருந்து வெளியேறிவிட்டது. தன் இணையதளத்திலிருந்த, தகவல்கள், லிங்குகள் என அனைத்தையும் நீக்கிவிட்டு, வெறுமையுடன் காட்சியளிக்கும் Torrentz.eu இணையதளம் ‘Torrentz ஒரு காலத்தில், இலவசமாகவும், வேகமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருந்த மெட்டா சர்ச் என்ஜினாக இருந்தது’ என்று இறந்த காலத்தில் குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது. மேலும் அதில் எதையாவது தேடினால் ‘Torrentz உங்களை எப்போது காதலிக்கிறது. பிரியாவிடை கொடுங்கள்’ என ஒரு வாசகம் டிஸ்பிளே ஆகிறது. இதனால் தான் நெட்டிசன்கள் மிகவும் துன்பத்தில் இருக்கின்றனர்.  minnambalam.com

கருத்துகள் இல்லை: