மதுரை :தமிழகம் முழுவதும், கூலிப்படையாக செயல்பட, மதுரையில், 30 புதிய
ரவுடிகள் உருவாக்கப்பட்டிருப்பது, போலீசாரை, அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மதுரையில்,
கொலை, அடிதடி, கொலை முயற்சி வழக்குகளில், சிக்குபவர்களில் பலர்,
போலீசாருக்கு, புதுமுகங்களாக உள்ளனர். அவர்களது பின்னணி குறித்து
தெரியாததால், தொடர்ந்து, குற்றச் செயல்களில், புதுமுகங்கள்
ஈடுபடுகின்றனர்.இதில் சிலர், பிரபல ரவுடிகளிடம், பல ஆண்டுகளாக,
உதவியாளர்களாக இருப்பவர்கள். இந்தாண்டு, ஜன.,31ல், தி.மு.க., பிரமுகர்,
"பொட்டு' சுரேஷ் கொலையில், கைதானவர்களில் ஐந்து பேர், நட்புக்காக
ஈடுபட்டவர்கள்."கொலை செய்யத்தான் உடன் செல்கிறோம்' என, அறியாமல், சென்று
சிக்கியவர்கள். அதேசமயம், அவ்வழக்கில் சரணடைந்த சிலர், மதுரை
ஜெய்ஹிந்த்புரம் பகுதி, பிரபல ரவுடி ஒருவரின் கூட்டாளிகள்.இதேபோல்,சில
ரவுடிகளின் கீழ், புதியவர்கள், 30 பேர் ரவுடிகளாக உருவாக்கப்பட்டிருப்பது,
போலீஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து,போலீசார் கூறியதாவது:மதுரையை சேர்ந்த புது ரவுடிகள், கூலிப்படைகளாக, தமிழகம் முழுவதும், செயல்படுகின்றனர். இவர்கள் பின்னணி குறித்து, ஆய்வு செய்ததில், "சீனியர்களின்' பின்புலத்தை அறியாமல், அவர்களுடன் நட்பாக இருந்து, மது, பணம் என, அதற்கு அடிமையாகி, ரவுடியாக மாறியது தெரிந்தது.இவர்கள் புதுமுகங்கள் என்பதால், தற்போது தான், நாங்கள் பராமரிக்கும் ரவுடி பட்டியலில் சேர்த்துள்ளோம். ஏதேனும் வழக்கில் சிக்கும்போது தான், அவர்களின் பின்னணி குறித்த, தகவல் எங்களுக்கு கிடைக்கிறது. தற்போது, எந்த வழக்கு என்றாலும், புதுமுகங்களாக இருந்தால், அவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர் எதுனாச்சும் டிப்ளோமா, டிகிரி கோர்ஸ் ன்னு ஆரம்பிக்காம இருந்தா சரிதான்.
மதுரைல இப்பெல்லாம் பர்த்டே கேக்கையே கூலிப்படையை வைத்துதான் வெட்டுராங்கலாம் dinamalar,com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக