மண்ணோடும்
மரங்களோடும் இனைந்து வாழ்ந்தால் மானுடம் மகத்தான வாழ்வை பெரும் என நம்
முன்னோர்கள் சொல்வதுண்டு. இயற்கை வெல்ல முற்படமால் இனைந்து
வாழ்ந்தும்,இயற்கையை சுரண்ட நினைக்காமல் அதை தேவைக்கு பயன்படுத்தும்
வகையில் முன்னெடுத்து சென்றால் சிறப்பாக இருக்கும். ஆனால் வேகமான உலகில்
உற்பத்தி, லாபத்தை குறிவைத்து செல்ல இந்த போட்டியில் எளிய நிலையில் உள்ள
விவசாயிகள் வீழ்ச்சியை சந்திக்கின்றனர்.இதை
போக்க குறிப்பாக பல கோடி வர்த்தகம் உள்ள ஆமணக்கு பயர் வகையில் நம்
விவசாயிகள் முன் னேற்றம் காணவே உருவாக்கியுள்ளோம் 'கெஸ்டர் கோல்ட்' எனும்
பயிர் வளர்ச்சி ஊக்கி கலவை"எ ன்கிறார் முனைவர் எம்.கே.கலாராணி.
இவர் ஏத்தாபூரில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் பேராசிரியர் மற்றும் தலைவராக உள்ளார். சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் முகாமில் இந்த புதிய கண்டுபிடிப்பை குறித்து விளக்குகிறார்."
ஆமணக்கு எண்ணெய் லூப்ரிகண்ட் ஆயில் அதாவது வளவளப்பு கொண்ட ஆயில்
தொழிற்சாலைகள் உட்பட்ட பல இடங்களில் பயன்படுகிறது..உலக நாடுகளுக்கு இதன்
தேவை அதிகம்..
மேலும் மருத்துவ குணங்களும் கொண்டவை...எனவே சர்வதேச சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்று.உலகளவில் உற்பத்தியில் நம் இந்தியா முக்கிய இடம் இவ்வணிகத்தில் வகிக்கிறது..இதன் மூலம் மட்டும் 2253 கோடி வரை அந்நிய செலாவணி கிடைக்கிறது.
மேலும் மருத்துவ குணங்களும் கொண்டவை...எனவே சர்வதேச சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்று.உலகளவில் உற்பத்தியில் நம் இந்தியா முக்கிய இடம் இவ்வணிகத்தில் வகிக்கிறது..இதன் மூலம் மட்டும் 2253 கோடி வரை அந்நிய செலாவணி கிடைக்கிறது.
இந்தியாவில்
குஜராத், ஆந்திராவில் முக்கிய உற்பத்தி...தமிழகத்தில் சேலம் மற்றும்
நாமக்கல் மாவட் டத்தில் ஊடுபயிராக பயிர் செய்யப்பட்டு வருகிறது.
எங்கள்
ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் 2009 இல் வெளியிடப்பட்ட ஏத்தாபூர் 1 என்ற
வீரிய ஒட்டு ராகம் ஏக்கருக்கு மானாவாரியாக 800 கிலோ மற்றும் இறவையில் 1200
கிலோ மகசூல் தரவல்லது.
இந்த
பயிருக்கு அதிக வெயில் போன்ற சுற்று சூழல் நிலவும் சீதோசன நிலையால் மகசூல்
எண்ணிக்கை குறையும் ஆபத்து இருக்கிறது....வழக்கமாக ஆண் பூக்களில் இருந்த
மகரந்த தூள்கள் காற்றின் வழியோ, தேனிக்கள் மூலமாகவோ பெண் பூக்களில் சேரும்
போது இன பெருக்கம் ஏற்படுகிறது....ஆனால் தற்போது சீதோசன நிலையால் பெண்
பூக்கள் எண்ணிக்கை குறைகிறது.
இதனால்
மகசூல் குறைகிறது இதை போக்க கண்டுபிடிக்கப்பட்டது தான் 'ஆமணக்கு கோல்ட்'
எனும் நாங்கள் கண்டுபிடித்த பயிர் வளர்ச்சி ஊக்கி கலவை...இதை 5மில்லி
எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஆமணக்கு பயிர் இலைகளில் 25
நாட்களுக்கு ஒருமுறை தெளித்தால் பெண் பூக்கள் அதிகளவு வளர்ச்சி ஆகும்.
எண்ணிக்கை கூடும்.
இதன்
மூலம் 25,000 ஏக்கருக்கும் மேல் இந்த ஆமணக்கு விதைத்துள்ள பகுதிகளில்
விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்...' என்றார் உண்மையான அக்கறையோடு. இதை
பயன்படுத்தும் விவசாயிகளும் நல்ல பலன் தருவதாக கூறுகின்றனர்...என்க 'ஆம்
நல்ல மகசூல் தந்து எனக்கு லாபம் தந்துள்ளது' என்றார் அருகில் இருந்த
விவசாயி கணபதி.
இந்த
கலவையின் விலை ரூ 50 தான்....நிச்சயம் நல்ல பலன் தரும்...எளிய செலவில்
அதிக மகசூலை நம் விவசாயிகள் பெற வேண்டும் என்பதே எம் ஆராய்ச்சி நிலையத்தின்
விருப்பம் கோடிக்கணக்கில் தமிழக விவசாயிகளுக்கு லாபம் உண்டு ' என்கிறார்
இதை தயாரித்த பேராசிரியர் கலாராணி அடக்கத்துடன்.
எளிய
வகையில் உயரிய விவசாயம் நடந்தால் விவசாயி மட்டுமல்ல ஏனைய மக்களும் நலமோடு
இருப்பார்...ஏனெனில் விவசாயி நல்ல நிலையில் இருந்தால் நாடு நல்ல நிலையில்
இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக