புதன், 19 ஜூன், 2013

Khushboo :நான்தான் அன்னைக்கே சொன்னேனே கேட்டீங்களா?

சென்னை: திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வது குறித்து தனது கருத்தை ஒட்டிய கோணத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும், தனக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள் என்றும் கேட்டுள்ளார் நடிகை குஷ்பு.கற்பு குறித்து முன்பு கருத்து சொல்லி பலரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டவர் குஷ்பு.திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைக்கும்போது பாதுகாப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்று சொன்னார் குஷ்பு. இதையடுத்து அவருக்கு எதிராக வழக்குகள் பாய்ந்தன. போராட்டங்களும் வெடித்தன.அவர் மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டன.
  ஆனால் அதை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றம் வரை போய் தனக்கு சாதகமாக தீர்ப்பையும் பெற்றார்.இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தி்ல் ஒரு வழக்கில் தீ்ர்ப்பளித்த ஹைகோர்ட், திருமணம் ஆகாவிட்டாலும் கூட ஒரு ஆணும் பெண்ணும் உடல் ரீதியாக இணைந்து குழந்தையும் பெற்று்க கொண்டால் அவர்கள் கணவன் மனைவியாகவே கருதப்படுவர்.
 
அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையும் முறையற்றதாக கருதப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது.
 
இதைச் சுட்டிக் காட்டி தனது ட்விட்டரில் ஒரு டிவிட் செய்தியைத் தட்டி விட்டுள்ளார் குஷ்பு. அதில், நான் சில ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை இப்போது உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வது நடக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது.
 
இப்போது எந்த அரசியல் கட்சியாவது உயர்நீதிமன்றத்திற்கு வெளியே நின்று கொண்டு கத்துகிறார்களா என்பதை நான் பார்க்கக் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.இதற்கு என்ன போராட்டம் நடக்கப் போகிறதோ....!

கருத்துகள் இல்லை: