கந்தர்வகோட்டை:ரூ.30 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 8ம் வகுப்பு
மாணவன்
பத்திரமாக மீட்கப்பட்டான். முந்திரி காட்டில் வைக்கப்பட்ட பணத்தை எடுத்துக் கொண்டு சிறுவனை விடுவித்தனர் கடத்தல்காரர்கள். திட்டம் போட்டு மடக்க முயன்ற போலீசார், கோட்டை விட்டுவிட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கொத்தம்பட்டியை சேர்ந்தவர் அருணாசலம். அரணிபட்டி ஊராட்சி செயலராக உள்ளார். மனைவி ராணி. இவர்களது மகன் அழகேசன் (13), அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8&ம் வகுப்பு படிக்கிறான். கடந்த 15&ம் தேதி மாலை ராணியின் வீட்டுக்கு பைக்கில் 2 பேர் வந்தனர். உறவினர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்கள், திருமண பத்திரிகை கொடுத்தனர். பின்னர் அருணாசலத்தின் அண்ணன் தனபாலுக்கு பத்திரிகை வைக்க வேண்டும் என்று கூறிய அவர்கள், வீட்டை காட்டும்படி கூறி சிறுவனை பைக்கில் அழைத்துச் சென்றனர். அதன் பிறகு அழகேசன் திரும்பி வரவில்லை.
அன்றிரவு அருணாசலத்தின் செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ரூ.30 லட்சம் தந்தால் உன் மகனை விட்டுவிடுவோம். போலீசில் சொன்னால் மகனை கொன்றுவிடுவோம் என மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசில் அருணாசலம் புகார் செய்தார். போலீசார், தனிப்படை அமைத்து மாணவனை ரகசியமாக தேடிவந்தனர்
இந்நிலையில், மீண்டும் அருணாசலத்தின் போனுக்கு மர்ம நபர்கள் தொடர்பு கொண்டனர். அப்போது, ‘என்னிடம் அவ்வளவு பணம் இல்லை’ என்று அருணாசலம் கூறினார். இதனால் பேரம் பேசி கடைசியில் ரூ.13 லட்சத்துக்கு ஒப்புக் கொண்டனர். பணத்தை தச்சன்குறிச்சி மலைக்கு அதிகாலை 4 மணிக்கு கொண்டுவரும்படியும், போலீசுக்கு தெரிவிக்கக்கூடாது எனவும் எச்சரித்தனர்.
இந்த விஷயம் தெரிந்ததும் எஸ்பி உமா தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டு புதுக்கோட்டை முழுவதும் மப்டி உடையில் போலீசார் கண்காணித்து வந்தனர். நேற்று அதிகாலை அருணாசலம் பணத்துடன் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றார். போலீசார் மாறுவேடத்தில் அவரை பின்தொடர்ந்தனர். இதை தெரிந்துகொண்ட மர்ம நபர்கள் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டனர்.
அதன்பிறகு அவர்கள் வேறு வேறு எண்ணில் அருணாசலத்தை தொடர்பு கொண்டு பேசினர். ‘நீ போலீசுக்கு போனது தெரிந்துவிட்டது. ஆனாலும் எங்களை பிடிக்க முடியாது’ என கூறியுள்ளனர். பணத்தை கொடுத்து விடுவதாக அருணாசலம் கூறினார்.
இன்று அதிகாலை 3 மணிக்கு தஞ்சை & புதுக்கோட்டை சாலையில் காடவராயன்பட்டியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரி அருகே உள்ள முந்திரி காட்டில் பணத்தை வைத்துவிட்டு செல்லும்படியும், சிறுவனை விட்டுவிடுவதாகவும் மர்ம நபர்கள் கூறியுள்ளனர். அந்த இடத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
அதிகாலை 3 மணிக்கு மர்ம நபர்கள் சொன்ன இடத்தில் அருணாசலம் பணத்தை வைத்துவிட்டு சென்றார். அந்தப் பகுதியில் மறைந்திருந்த போலீசார், தீவிரமாக கண்காணித்து வந்தனர். சிறிது நேரத்தில் பணப் பெட்டி காணாமல் போனது. அதை யார் எடுத்து சென்றார்கள் என தெரியவில்லை. மாணவனை மீட்காமல் பணம் மட்டும் பறிபோனதால் போலீசாரும், அருணாசலமும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே இன்று காலை ஒரு சிறுவன் தனியாக நடந்து வருவதை பார்த்த ரோந்து போலீசார் அவனை மீட்டு விசாரித்தனர். அது, மர்ம நபர்களால் கடத்தப்பட்ட அழகேசன் என்பது தெரிந்தது. சிலர் கண்ணை கட்டி காரில் அழைத்து வந்ததாகவும், இங்கு இறக்கிவிட்டு சென்றதாகவும் சிறுவன் கூறியுள்ளான். அவனை தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிறுவன் முகத்தில் காயங்கள் இருந்தது. மர்ம நபர்கள் அவனை தாக்கியிருப்பார்கள் என தெரிகிறது. புதுக்கோட்டை கோர்ட்டில் மாணவனை போலீசார் இன்று ஆஜர்
படுத்துவார்கள் என தெரி
போலீசுக்கு பெப்பே...
‘மாணவனை மீட்க போராடி வந்தோம். தொடர்ந்து செல்போன் டவர்கள் கண்காணிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் உடனே போலீசார் அலர்ட் செய்யப்பட்டனர். மர்ம நபர்கள் சொன்னபடி அருணாசலத்திடம் பணத்தை கொடுத்து அனுப்பலாம் என நினைத்திருந்தோம். மகனை கொன்றுவிடுவார்களோ என்ற பயத்தில் அவர், போலீசுக்கு தெரிவிக்காமல் பணத்தை முந்திரி காட்டுக்கு கொண்டு சென்று வைத்துள்ளார். மர்ம நபர்கள் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் கும்பலை பிடிக்க முடியவில்லை’ என போலீசார் கூறினர்.
ஆனால் மாணவன் தரப்பினரிடம் விசாரித்தபோது, ‘போலீசார்தான் பணத்தை கொடுத்து அனுப்பினர். அவர்களும் உடன் வந்தனர். பணத்தை வைத்த முந்திரி காடு பகுதியிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டிருந்தனர். ஆனாலும் கடத்தல்காரர்களை பிடிக்கவில்லை’ என்றனர். இது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக