தலைநகர் சென்னையில் திரும்பிய இடமெல்லாம் வண்ண வண்ண சுவரொட்டிகள்... எல்லா பயிற்சி மையங்களின் விளம்பரத்திலும் கடந்த ஆண்டு அவர்களின் மாணவர்கள் நிகழ்த்திய சாதனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தகுதியான மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு இலவச பயிற்சியளிக்கும் மையங்களும் தற்போது பெருகி வருகின்றன. அதனால் தானோ என்னவோ தற்போது சென்னையில் மழை வருவதற்கான அறிகுறிகள் அதிகம் தென்படுகின்றன. இத்தகைய பயிற்சி மையங்களின் நோக்கம், செயல்பாடு குறித்து அறிய களத்தில் இறங்கினோம்.
கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருந்தன. மாணவர்களை கவர அளவுக்கதிகமாக கவர்ச்சிகரமான பொய்களை உளறுவதும் நடக்கிறது.
கடந்த மே முதல் வாரத்தில் யுபிஎஸ்சி தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தியா முழுவதும் 998 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் 97 பேர் தமிழகத்தைச் சார்ந்தவர்கள். இந்த முடிவுகள் வெளியானவுடன் தமிழக அரசின் குடிமை பணிகள் பயிற்சி மையம் தங்களிடம் படித்த மாணவர்களில் 49 பேர் தேர்வு செய்யப்பட்டதாகவும், மனித நேய அறக்கட்டளை தங்களிடம் படித்த மாணவர்களில் 45 பேர் தேர்வு செய்யபட்டதாகவும், சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி தங்களிடம் படித்த மாணவர்களில் 51 பேர் தேர்வு செய்யப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.
இது தவிர தமிழக மெங்கும் பல நூறு ஐ.ஏ.எஸ். அகாடமிகள் இயங்கி வருகின்றன. இந்த எண்ணிக்கையை கேட்டவுடன் நமக்கு தலை சுற்றியது. ஒவ்வொரு பயிற்சி மையமும் வெளியிட்ட தேர்வானவர்களின் பட்டிலை அலச தொடங்கினோம்.
இது போல
போலிச் செய்திகளை வெளியிட்டு, மனிதநேயம் அறக்கட்டளை மற்றும் சைதை
துரைசாமியை வளர்த்து விட்டதில் தினத்தந்தியின் பங்கு மிகப்பெரிது
பட்டியல் ஒரு
புதிராக இருப்பதை எங்களால் உணர முடிந்தது. எனவே யாம் பெற்ற இன்பம் பெருக
இவ்வையகம் என அந்த பட்டியலை தங்களின் பார்வைக்கு படைக்கிறோம்.இதில் கோபாலகிருஷ்ணன், டி.கங்காதரன், எம்.பரணிகுமார், ஆர்.கேசவன் ஆகியோர் தங்களிடம் படித்ததாக மூன்று நிறுவனங்களும் தெரிவிக்கின்றன. (இப்பவே கண்ணை கட்டுதே....)
இது தவிர 15 மாணவ, மாணவியர் தங்களிடம் படித்ததாக மனித நேய அறக்கட்டளையும், சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியும் தெரிவிக்கின்றன. இதில் எது உண்மை என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் விளக்க வேண்டும். சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாடமிக்கு “லாபி” செய்ய சரியான ஆட்கள் இல்லாதததால் அவர்களின் சாதனைகள் இருட்டடிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த மாணவர்கள் எங்குதான் படித்தார்கள் என்று சரியாக கண்டுபிடித்து தருவோருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு தர ஏகலைவன் நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது. இதற்காக சில விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.
* கண்டுபிடிப்பை தபால் கார்டில் எழுதி அனுப்ப வேண்டும்.
* அஞ்சல் தலை அவசியம் ஓட்டி இருக்க வேண்டும்.
* ஸ்பெக்டரம் ஏலமுறையை போல, முன்னால் வரும் கடிதங்களுக்கு முன்னுரிமை உண்டு.
* ஆசிரியர் குழுவின் தீர்ப்பே இறுதியானது
உண்மையில் இந்த மாணவர்கள் எங்குதான் படித்தார்கள்?
ஜென்டில்மேன் படத்தில் அர்ஜூன் பகலில் நல்லவராகவும், இரவில் கெட்டவராகவும் இரட்டை வேடம் போடுவதை போல, பகலில் ஒரு நிறுவனத்திலும், இரவில் மற்றொரு நிறுவனத்திலும் படித்தார்களா? என்பதும் புரியாத புதிராகவே உள்ளது.
& ஆர்.சிங்காரவடிவேலன்,
முதன்மை கப்பல் பொறியாளர்,
நிர்வாக ஆசிரியர்.
நன்றி ஏகலைவன் வார இதழ்
குறிப்பு : சைதை துரைசாமி மனித நேயம் ஐஏஎஸ் அகாடமியின் பெயரில் நடத்தும் பகீர் மோசடிகள் குறித்து ஏற்கனவே சவுக்கு இணைய தளத்தில் அலிபாபாவும் ஆயிரம் திருடர்களும் என்ற கட்டுரையில் விரிவாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக