செவ்வாய், 18 ஜூன், 2013

ராகுல் காந்தி தேமுதிகவுக்கு வாழ்வு கொடுப்பார் ? மீண்டும் ஒரு மொரார்ஜி

பழைய மொராஜி தேசாய் திமுகவின் ஆதரவோடு இந்திரா காந்தியை
தோற்கடித்து பிரதமர் ஆகிய உடனே செய்த செய்த காரியம் கலைஞரை எப்படியாவது ஒழித்துக்கட்ட தீர்மானித்ததுதான் ,
வரலாற்றில் காங்கிரசை முதல் முதலில் வீழ்த்திய கலைஞரை அவர்கள் என்றுமே மன்னித்ததில்லை ,கலைஞர் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழகத்தின் நிலை மேலும் மேலும் உயர்கிறதே ? தமிழகத்தின் பழம் பெருமையெல்லாம் மீண்டும் உயிர்பெருகிறதே, வடவர்களின் சரித்திர வெற்றி எல்லாம் கனவாகி போய் விடுமோ என்ற அச்சம் வருகிறதே ,
அன்றைய மொரார்ஜி பின்பு அதே பாணியில் பல வடநாட்டு தலைவர்கள் வந்தனர் வந்து கொண்டும் இருக்கின்றனர் , இந்திய உயர் நீதிமன்றங்களின் ஜாதி ஆதிக்கத்தை பற்றி அருந்ததி ராய் மிக விலாவாரியாக எழுதியிருக்கிறார் .எத்தனை மோசமான கிரிமினல் வழக்குகள் இருந்தாலும் ஜெயலலிதாவுக்கு நீதி துறை எப்படி நடகின்றது  என்று எல்லாரும் சிந்தித்து பார்க்கவேண்டும் .
உண்மையை எத்தனை நாள்தான் அடக்கி வைத்திருப்பார்கள் ?
அதிகம் போவானேன் ஜெயலலிதா கலைஞரை  பொய்யான வழக்கொன்று தயாரித்து அதில் இரவோடு இரவாக கலைஞரை இழுத்துக்கொண்டு போனார்களே அப்பொழுது உள்துறை அமைச்சராக யார் இருந்தார்?
அத்வானி ! பார்பன சோவின் இரண்டாவது அரசியல் குரு இந்த அத்வானிதான் முதல் குரு அந்த மொரார்ஜி தேசாய் தான் .
இன்று அந்த பழைய flashback எல்லாம் மீண்டும் ஞாபக படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது
அதே  பார்பன பனியா கூட்டம் அதே நிகழ்ச்சி நிரலுடன் திமுகவை ஒழித்து கட்ட முயற்சி செய்கின்றன
அத்வானியும் அதே பாணியில் ராகுல் காந்தியும் திமுகவை முதுகில் குத்த காத்திருபதாக சந்தேகம் எழுகிறது .

கருத்துகள் இல்லை: