சென்னை:ஆர்ட் டைரக்டர் சாபு சிரில்
நடித்துள்ள படத்துக்கு சென்சார்


சான்றிதழ் வழங்க மறுத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற
படங்களுக்கு ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்திருப்பவர் சாபு சிரில். இவர்
மலையாளத்தில் ‘பிதாவினும் புத்ரனும்‘ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
இயக்குனர் வி.கே.பிரகாஷும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தீபெஷ்
டி.சன்னி வெயின் இயக்கி உள்ளார். இரண்டு கிறிஸ்தவ துறவு பெண்கள் மாறுபட்ட
கருத்துகளுடன் கூடிய ஆமென் என்ற புத்தகத்தின் மீது ஈடுபாடு கொள்வதுபோன்று
கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படம் முடிந்து சென்சார் சான்றிதழுக்காக
திரையிடப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் குறிப்பிட்ட ஒரு
மதத்தை தவறான நோக்கத்துடன் சித்தரிப்பதுபோல் படத்தில் கருத்து
சொல்லப்படுவதாக கூறி சான்றிதழ் தர மறுத்தனர். முன்னதாக இப்பட தலைப்புடன்
‘பரிசுத்தமாவினும்‘ என்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த
வார்த்தைக்கும் அங்கீகாரம் மறுக்கப்பட்டதால் அதனை இயக்குனர் நீக்கினார்
என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக