வெள்ளி, 21 ஜூன், 2013

கடவுளைக் கும்பிட போன 71 ஆயிரம் பக்தர்கள் : கடவுள்கள் காப்பாற்றவில்லை - இராணுவம் விரைந்துள்ளது

 viduthalai.in
வட மாநிலங்களில் உள்ள பத்ரிநாத், கேதாரநாத் முதலிய இடங்களில் உள்ள இந்துக் கோயில் களில் வழிபடச் சென்ற பக்தர்கள்  வெள்ளத்தில் சிக்கி வேதனைப்படு கின்றனர். ஹெலிகாப்டர் உட்பட இராணுவம் பக்தர் களைக் காப்பாற்ற விரைந்துள்ளது. தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் களும் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு அவர்கள் பிரதமரைச் சந்தித்து, பாதிக்கப் பட்ட பக்தர்களை மீட் பது குறித்துப் பேச இருக்கிறார்.
வடமாநிலங்களில் தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள் ளது. ஆங்காங்கு ஏற் பட்ட காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளம் காரண மாக கோயில் தலங் களில் மொத்தம் 71,000 பேர் சிக்கியுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட யாத்ரீ கர்களைக் காணவில்லை என தகவல்கள் தெரி விக்கின்றன.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக உத்தரகண்ட், இமாசலப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் இதன் பாதிப்பு அதிக மாக உள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு, திடீர் வெள்ளம், போன் றவற்றால் 52 பேர் உயிரிழந்துள்ளனர். 175 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. ருத்ரபிரயாக் பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கேதாரநாத் மூழ்கியது
பக்தர்கள் அதிகம் செல்லும் கேதார்நாத் கோயில் மழை வெள்ளத் தில் மூழ்கியது. கோயில் மதில் சுவரின் ஒருபகுதி வெள் ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கோயில் அருகே சிக்கியுள்ள பக்தர்களை மீட்க நட வடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் உறுதி
உத்தரகண்ட் மாநி லத்துக்கு தேவையான அனைத்து உதவி களையும் மத்திய அரசு செய்யும் என மாநில முதல்வர் விஜய் பகு குணாவிடம், பிரதமர் மன்மோகன் சிங் உறுதி கூறியுள்ளார். மீட்புப் பணி மற்றும் நிவாரண உதவிகள் செய்வதற்காக மத்திய அரசின் பல் வேறு துறைகளுக்கும் பிரதமர் உத்தரவிட் டுள்ளார்.
கங்கோத்திரி நிலையும் அதுதான்!
இமயமலைத் தொடரில் உள்ள  பத்ரிநாத்,கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட  தலங்களிலும், சமோலி, ருத்ரபிரயாக், உத்தரகாசி யிலும் மொத்தம் 71,440 யாத்ரீகர்கள் சிக்கி உள் ளனர். அவர்களை மீட் கத் தேவையான நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இமாசலப்பிரதேசத்தில் கின்னாவூர் பகுதியில் நிலச்சரிவால் முதல்வர் வீரபத்ரசிங் 60 மணி நேரம் சிக்கிக் கொண் டார். மேலும் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள 1,700 பேர் மீட்கப் படவில்லை. பின்னர் காங்கிரஸ் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் அழைத்து வரப்பட்டார்.
உத்தரகண்டில் உள்ள கோவிந்த் காட் குருத் வாராவுக்கு எந்த சேத மும் ஏற்படவில்லை என மாநில சிறுபான்மை யினர் நல ஆணையத் தலைவர் நரீந்தர் ஜீத் சிங் கூறியுள்ளார். அங்குள்ள சீக்கியர்களின் புனித நூலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. குருத் வாராவில் சிக்கியுள்ள 9000 யாத்ரீகர்களை மீட்க ராணுவத்தினர் உதவியுடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
மேற்கு வங்கம் உதவி உத்தரகண்ட் மாநிலத்தில் மழை, வெள்ளத்தில் சிக்கியுள்ள யாத்ரீகர் களை மீட்கத் தேவையான உதவி களை மேற்கு வங்க அரசு செய்யும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த யாத்ரீகர்களை மீட்பது தொடர்பாக உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகு ணாவுடன் பேச்சு நடத்தியுள்ளேன். இதற்காக சில ஹெலிகாப்டர்களை யும் அனுப்ப முடிவு செய்துள்ளோம் என்று மம்தா தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தனர்!
உத்தரப்பிரதேசத்திலும் பலத்த மழையால் 4 பேர் உயிரிழந்தனர். கங்கை, யமுனை, சாரதா போன்ற நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மாநில அரசு உஷார் நிலையை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை செயலாளர் தீபக் சிங்கால் கூறியது: யமுனை ஆற்றில் 8 லட்சம் கன அடியும், சாரதா ஆற்றில் 4 லட்சம் கன அடி வெள்ளநீரும் வெளி யேற்றப்பட்டுள்ளன. 23 மாவட்டங் களில் மிகவும் அபாய நிலை காணப் படுகிறது.
ஹரியாணாவிலும் யமுனை நகர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் மூழ்கியுள்ளன. பஞ்சாப் மாநிலத்திலும் அமிருதசரஸ், பாட்டியாலா, சண்டீகர், நகோட்கர் உள்ளிட்ட நகரங்களில் ஓரளவு மழை பெய்துள்ளது.
யாத்திரை ரத்து!
மானசரோவர் யாத்திரையில் இரு குழுக்களின் பயணம் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது. மோசமான வானி லையால் யாத்திரை ரத்து செய்யப் பட்டது.
ரிஷிகேஷ்-கேதாரநாத் சாலை யிலும் நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் தஹோட் பகுதியில் கட்டட கூரை இடிந்து விழுந்ததில் மூதாட்டி உள்பட இருவர் உயிரிழந்தனர். யமுனை ஆற்றில் மழைவெள்ளம் அபாய கட் டத்தைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆந்திர யாத்ரீகர்களை மீட்க நடவடிக்கை: உத்தரகண்ட் மாநிலத் தில் சிக்கியுள்ள 3000-க்கும் மேற் பட்ட ஆந்திர மாநில யாத்ரீகர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூறியுள்ளார். மொத்தம் 12 ஹெலிகாப்டர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.
விரைந்தது விமானப்படை
விமானப்படையைச் சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உத்தர கண்டில் மீட்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. கேதாரநாத்தில் சிக்கி யிருந்த 200 பேர் மீட்கப்பட்டனர்.
சோனியா காந்தி அறிவுறுத்தல்: மழை,வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள  இமாசலப் பிரதேசம்,உத்தரகண்ட்டில் தேவையான நிவாரணப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை துரிதமாக மேற்கொள்ளும் படியும் சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.
டி.ஆர். பாலு நடவடிக்கை சைதாப்பேட்டை மற்றும் கூடுவாஞ்சேரி பகுதியில் இருந்து கடந்த 8ஆம் தேதி 50 பேர் ரயில் மூலம் டில்லி சென்றனர். இவர்களில் 30 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் அங்கிருந்து ஆக்ரா, ஹரிதுவார், ரிஷிகேஷ் ஆகிய தலங்களுக்குச் சென்றனர்.
பின்னர் உத்தரகாண்ட் மாநிலத் தில் கேதர்நாத் சென்ற அவர்கள் அங்கிருந்து பத்ரிநாத் செல்லத் திட்டமிட்டிருந்தனர். இதன்படி மலைப்பகுதி வழியாக வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப் போது அப்பகுதியில்  மழை கொட்டியது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், மலைப்பகுதியில் ஒரு இடத்தில் வைத்து, இதற்குமேல் செல்ல வேண்டாம் என்று தடுத் துள்ளனர்.
இதையடுத்து அனைவரும் தங் களது பத்ரிநாத் பயணத்தை இடையிலேயே முடித்துக் கொண்டு அருகில் உள்ள லாட்ஜில் தஞ்சம் புகுந்தனர். இவர்கள் தங்கியிருக்கும் இடத்தைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் எந்தப் பக்கமும் செல்ல முடியாமல் சென்னை பக்தர்கள் பரிதவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து உத்தரகாண்ட் பத்ரிநாத்துக்கு சுற் றுலா சென்ற 50 பேரையும் பத்திரமாக அழைத்துவர தி.மு.க. நாடாளு மன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்காக இன்று மத்திய  உள் துறை அமைச்சரை அவர் சந்தித்துப் பேசுகிறார்.

50 காவல்துறையினரை காணவில்லை
உத்தரகண்ட் மாநிலத்தில் மழை, வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிக்கு சென்ற 50 காவல்துறையினரை காணவில்லை என்று  காவல்துறை உயர் அதி காரிக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் மீட்பு பணிக்காகச் சென்ற காவல்துறையினர் வெள்ளத்தில்  சிக்கியதாகவும் 5 காவலர்கள் மட்டுமே மீட்கப்பட்டதாகவும் மற்ற வர்களை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: