திங்கள், 17 ஜூன், 2013

Pakistan 10வயது பெண்ணை திருமணம் செய்த 50 வயது பழிக்கு பழியாம்

பழைய பகையை தீர்த்துக்கொள்வதற்காக பெண் கொடுப்பதும், பெண்
எடுப்பதும் பாகிஸ்தானில் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையை 'வானி' என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஹபீசாபாத் மாவட்டம், மலாஹன்வாலா பகுதியை சேர்ந்த முகம்மது அக்ரம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் முனாவரன் என்ற பெண்ணை கடத்திச் சென்று விட்டார். பின்னர், அந்த பெண்ணையே இரண்டாம் மனைவியாக திருமணம் செய்துக்கொண்டு அவருடன் குடும்பம் நடத்தினார். இதனால் அக்ரம் குடும்பத்தாருக்கும், முனாவரன் குடும்பத்துக்கும் இடையில் தீராத பகை இருந்து வந்தது.
இந்த நெடுங்கால பகையை தீர்த்து கொள்வதற்காக தனது முதல் மனைவி மூலம் பிறந்த 10 வயது மகளை முனாவரனின் 50 வயது சகோதரனுக்கு 'வானி' முறையின்படி இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைக்கும்படி பஞ்சாயத்தார் தீர்ப்பளித்தனர். இதனையடுத்து, உள்ளூர் மதகுரு ஒருவருடன் தனது நண்பர்கள் சகிதமாக அக்ரமின் வீட்டுக்குள் நுழைந்த முனாவரனின் அண்ணன் பலக் ஷேர் என்பவர், அக்ரமின் முதல் மனைவி கண் எதிரிலேயே பலவந்தமாக அந்த 10 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்டு தனது வீட்டுக்கு இழுத்துச்சென்றார். அவரது பிடியில் இருந்து தப்பி வந்த அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் மணமகன் பலக் ஷேர், உள்ளூர் மதத் தலைவர் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: