சிங்கப்பூரில்
நேற்று (திங்கட்கிழமை) பல இடங்களில் காற்றில் புழுதிமூட்டம்
(haze) ஏற்பட்டதையடுத்து, பொதுமக்களை அவசியமில்லாமல் வெளியே தலைகாட்ட வேண்டாம் என அரசு அறிவித்தது. இந்த நிலை கிட்டத்தட்ட நேற்றைய தினம் முழுவதும் தொடர்ந்து காணப்பட்டது.
சில் இடங்களில் தெளிவாக பார்க்க முடியாதிருந்தது. சில இடங்களில் சிலருக்கு சுவாசிப்பதே கடினமாக இருந்தது. காற்றின் தூய்மைத் தன்மை நேற்று அபாயகரமான அளவைத் தொட்டது.
நேற்று மாலை 3 மணியளவில், காற்றின் தூய்மைக்கான கணிப்பீடான PSI (Pollutant Standards Index) 3 மணி நேர வாசிப்பு, 105 புள்ளிகளை தொட்டது. இரவு 10 மணிக்கு இது மேலும் மோசமாகி, 155 புள்ளிகளை தொட்டது. சிங்கப்பூரில் இந்த வாசிப்பு மிக மோசமான அளவைத் தொட்டது கடந்த 1997-ம் ஆண்டுதான். அப்போது வாசிப்பு 226 புள்ளி வரை சென்றிருந்தது.
சிங்கப்பூர் தொழிலாளர் நல அமைச்சு, அனைத்து நிறுவனங்களுக்கும் விடுத்த வேண்டுகோளில், தொழிலாளர்களை பில்டிங்குகளுக்கு வெளியே பணி புரிய அனுப்புவதை கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. சிங்கப்பூர் ராணுவம், மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் அவுட்டோர் பயிற்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
சிங்கப்பூர் சுற்றுப்புற சூழல் துறை விடுத்துள்ள அறிக்கையில், “இந்த நிலைக்கு காரணம், இந்தோனேசியா சுமாத்ரா பகுதியில் ஏற்பட்ட hotspot activities. இந்த நிலை அடுத்த சில் தினங்களுக்கு தொடரவும் வாய்ப்புள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சுற்றுப்புற சூழல் மற்றும் தண்ணீர் வளத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், “இது தொடர்பாக இந்தோனேசிய அரசிடம் பேசிவருகிறோம். இந்தோனேசிய சுற்றுப்புற சூழல் துறை அமைச்சருடன் இன்று நான் நேரடியாக பேசவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.விறுவிறுப்பு.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக