ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை 2 எம்.எல்.ஏக்களைக்
கொண்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சி ஆதரிக்கும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக தலைவர்
கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு ஆதரவு கோரி அக்கட்சியின் TT. நாடாளுமன்ற தலைவர்
டி.ஆர். பாலு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேசினார்.
பல ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தது
திமுக. இந்நிலையில் ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசில்
இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக கடந்த மார்ச்
மாதம் விலகியது. இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக
தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவு அளிக்கக் கோரி திமுக நாடாளுமன்ற தலைவர்
டி.ஆர். பாலு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று டெல்லியில் சந்தித்து
பேசினார். tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக