திங்கள், 17 ஜூன், 2013

18 வயதுக்கு மேல் திருமணசட்டம் எங்களை கட்டுபடுத்தாது! இஸ்லாமிய அமைப்பு ! அதெல்லாம் சரிதான் அதை ஏன் பெண்கள் கூறவில்லை ?

எங்கள் இனத்தின் சட்ட உரிமையை தடுக்க கூடாது' என்ற கோரிக்கையோடு சேலம் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர் சேலம் தர்மபுரி ஜமா அத்துல் உலமா சபையினர்.
அவர்களின் தலைவர் மௌலானா அல்ஹாஜ் கூறும்போது,
'முஸ்லிம் தனியார் சட்டம் வழங்கிய திருமண சட்டத்தின் அடிப்படையில் பெண்கள் பருவம் அடைந்துவிட்டாலே திருமணம் செய்யும் தகுதி பெற்றுவிடுகிறார்கள்..இந்த சட்ட உரிமையை நாடாளுமன்றமோ,சட்டமன்றமோ,உயர்நீதிமன்றமோ இதுவரை தடுத்ததில்லை.ஆனால் சமீப காலமாக குழந்தை திருமண தடைச் சட்டம் என்ற பெயரில் பருவமடைந்த ஆனால் 18 வயது பூர்த்தி அடையாத இஸ்லாமிய பெண்களின் திருமணத்தை மாவட்ட ஆட்சியாளர்கள் மூலம் தடுத்து நிறுத்தப்படுகின்றது..இது தமிழகம் முழுக்க நடந்து வருகிறது .எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எனவே இந்திய அரசியல் சட்டம் சிறுபான்மையினருக்கு வழங்கிய வாழ்வியல் அடிப்படை உரிமையை எங்களுக்கு வழங்கி இது சம்மந்தமான அரசு ஆணையை வெளியிட்டு உதவுமாறு தமிழக அரசிடம் கேட்டுகொள்கிறோம்..கட்டாய திருமண பதிவு சட்டத்திலிருந்து இஸ்லாமியர்களுக்கு விலக்களித்து நாங்கள் பள்ளிவாசல்களில் பதிவு செய்யும் முறையை அரசு ஏற்று இப்பதிவு அரசு அலுவல்களுக்கு செல்லத்தக்க ஆவணமாக ஏற்க ஆணையிடுமாறு தமிழக அரசிடம் கேட்டுக் கொள்கிறோம்...'என்றார்  அதெல்லாம் சரிதான் அதை ஏன் பெண்கள் கூறவில்லை nakkheeran.in
செய்தி, படம்: இளங்கோவன்

கருத்துகள் இல்லை: