
புது டில்லி: நிலச்சரிவில் இருந்து மீண்ட மக்களுக்கு போதுமான உணவு
கிடைக்காததால் பசியால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக
அதிகரி்த்துள்ளது.,உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவி்ல்
சிக்கி மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை கடந்து சென்று
கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது உயிர் பிழைத்தவர்கள் தங்களுக்கு
போதுமான உணவு கிடைக்காமல் பசியால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை 150-ஐ
எட்டியுள்ளது. இவர்களில் பெரும் பாலானோர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நிலச்சரிவில் இருந்து
தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் மலை உச்சியில் சிக்கி தவித்தவர்கள்
தங்களுக்கு எவ்வித உணவும் கிடைக்க வில்லை என தெரிவித்தனர். உணவு பொருட்கள்
கிடைக்காததால் பசியால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக
அதி்கரித்துள்ளது.
இதுகுறித்து இந்தோ திபெத் பார்டர் போலீஸ்
(ஐடிபிபி ) அதி்காரி கூறுகையில் மாநிலத்தில் கேதார்நாத் பகுதியை சேர்நத
ராம்பாதா மற்றும், கவுரிகான் , ஜங்கிள் செட்டி பகுதிகள் தான் மிகவும்
மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் ஆயிரம் பேர் வரையில்
சிக்கி யுள்ளனர். தற்போது ஹெலிகாப்டர் மூலம் சுமார் 275 பேர் வரை
மீட்கப்பட்டுள்ளனர். இப்பகுதிகள் சாலைகள் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீ்ட்பு படையினர் செங்குத்தான சரிவி்ல் இறங்க வேண்டிய சூழ்நிலையில்
வானிலை தொடர்ந்து சாதகமற்ற நிலையில் உள்ளது. இதன் காரணமாக மீட்பு பணியில்
தாமதம் ஏற்பட்டுள்ளது என கூறினார். dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக