
ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளார் சோனம் கபூர்.தனுஷ் நடிக்கும் முதல் இந்திப் படம் ராஞ்ஜ்ஹனா. ஆனந்த் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருப்பவர் சோனம் கபூர்.இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் அபாரமாக இருப்பதாக மீடியாக்கள் கொளுத்திப் போட்டுள்ளன. ஏற்கெனவே காதலில் சொதப்பி மன வருத்தத்தில் இருந்த சோனம், இந்தப் படத்தில் தனுஷுக்கு மிக நெருக்கமாகிவிட்டாராம். இதை தனுஷும் கூட மறுக்கவில்லை. இந்த நிலையில் இன்று ராஞ்ஜஹனா படத்தின் தமிழ் டப்பிங்கான அம்பிகாபதி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.இதில் படத்தின் நாயகி சோனம் கபூர் கலந்து கொண்டார். வட இந்தியப் பெண்ணான அவர் தமிழ் பெண் போல புடவை, ரவிக்கை, தலை நிறைய மல்லிகைப்பூ அணிந்து வந்திருந்தார் (அந்தப் புடவை அடிக்கடி சொன்ன பேச்சைக் கேட்காமல் இடுப்பைவிட்டு நழுவப் பார்க்க, அதை சோனம் சமாளித்த அழகுக்காகவே அரங்கை விட்டு வெளியேறாமல் கடைசி வரை பலர் நின்றது தனி கதை! ).
"அடுத்தடுத்த படங்களிலும் அவங்கதான் எனக்கு ஜோடியா நடிக்க
விரும்பறாங்களாம்... அவங்கதான் இப்படி சொல்றாங்க.. இது கெமிஸ்ட்ரி... அது
இதுன்னு என்ன வேணா நினைச்சுக்கங்க. இந்த பீல்டுல இருந்தா இதையெல்லாம் பேஸ்
பண்ணித்தான் ஆகணும்... என்னைப் பொருத்த வரை கதைதான் முக்கியம். நல்ல கதை
கிடைச்சா போதும். ஹீரோயின் யாருன்னு அப்புறம் பார்த்துக்கலாம்," என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக